அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
15:31

ஈரோடு: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், மாநில நிர்வாகக்குழு, ஈரோடு மாவட்ட செயலாளர் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இ.கம்யூ., மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாநில குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் பேசினர். அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை காக்க, மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். நீதிமன்றங்கள் வலியுறுத்தியும், அதை மதிக்காத மாநில அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இ.கம்யூ., மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் பிரபாகரன், வட்ட செயலாளர்கள் சோமசுந்தரம், மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X