மீண்டும் நிறுவனங்களை முடக்கினால் மீள்வது கடினம்! ஏற்றுமதியாளர் சங்கத்தினர் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 ஆக
2021
02:13
பதிவு செய்த நாள்
ஆக 03,2021 00:27

திருப்பூர்''மூன்றாவது அலை உருவாகாமல் தடுப்பது, அரசின் கடமை. நிறுவனங்களின் இயக்கத்தை மீண்டும் முடக்கினால், மீள்வது மிக கடினம்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறினார்.



கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னல் நகரான திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி, நிட்டிங், டையிங், பிரின்டிங் உட்பட அனைத்துவகை ஜாப்ஒர்க் நிறுவனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது.இரண்டாவது அலை ஓய்ந்ததால், கடந்த ஜூன் மாதம் முதல், பின்னலாடை துறை மீண்டும் இயக்கத்தை துவக்கியது. வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் திருப்பூர் நோக்கி வரத்துவங்கியுள்ளன.வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்களும், வேகமாக திருப்பூர் திரும்பி வருகின்றனர்.


ஆடை உற்பத்தி வேகமெடுத்து வருகிறது. வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றி, கடந்த கால இழப்புகளை ஈடுசெய்வதில் நிறுவனங்கள் முனைப்புகாட்டி வருகின்றன.இந்நிலையில், தற்போது, தமிழகத்தில் கோவை, ஈரோடு போன்ற சில மாவட்டங்களில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. மூன்றாவது அலை உருவாகலாம் என்கிற தகவல்கள் பரவி யுள்ளதால், தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:இரண்டாவது அலை ஓய்ந்த நிலையில், சில பகுதிகளில் தொற்று அதிகரிக்க துவங்கியிருப்பது, மூன்றாவது அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.



திருப்பூரை பொருத்தவரை, பின்னலாடை நிறுவனங்கள், தங்கள் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதில் வேகம் காட்டி வருகின்றன.போதுமான அளவு தடுப்பூசி தமிழக அரசுக்கு வந்து சேரவில்லை. தேவையான தடுப்பூசிகளை பெற்று, துரிதகதியில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., மூலம், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்காதது வருத்தம் அளிக்கிறது.


கப்பலில் ஆடைகளை அனுப்ப தேவையான கன்டெய்னர் தட்டுப்பாடு, வாடகை அபரிமிதமான உயர்வு, காலதாமதத்தால், வர்த்தகர்கள், ஆடைகளுக்கு விலையில் தள்ளுபடி கேட்கின்றனர். இப்படி, உற்பத்தியை துவக்கினாலும், தொழில் துறையினர் ஏராளமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.ஊரடங்கு அறிவித்து, நிறுவனங்களை மூடும் வழிமுறையையே மீண்டும் பின்பற்றினால், பின்னலாடை துறை, எழ முடியாத வகையிலானமிக கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும்.


ஒற்றை அரசாணை போதும், நிறுவனங்களின் இயக்கத்தை எளிதாக நிறுத்தி விடலாம்; ஆனால், மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவருவது அவ்வளவு சுலபமானதல்ல என்பதை, உணர வேண்டும்.ஐரோப்பா போன்ற வெளிநாடுகள் இயக்கத்தில் உள்ளன. குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து அனுப்பாதபட்சத்தில், அபராதம்; வர்த்தக இழப்பு, வெளிநாட்டு வர்த்தகர் மத்தியில் நம்பிக்கை இழப்பு, அவப்பெயர் எடுக்கும் நிலைக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் தள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04-ஆக-202120:48:05 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy தடுப்பூசி நிரந்தர தீர்வு அல்ல. கட்டாயம் மாஸ்க் போடவேண்டும். வேலை முடிந்து வீடு திரும்ப வேண்டும். கொறன தானாக வளருவதில்லை. வளர்க்க படுகிறது. ஏற்படும் நஷ்டம் / பலன் என்ன புரிந்து கொள்ள மக்களுக்கு அறிவுரை வழங்குங்கள்.
Rate this:
Cancel
03-ஆக-202120:49:50 IST Report Abuse
அப்புசாமி உங்களுக்கு குடுக்கவே பல லட்சம்.கோடி நிதி ஒதுக்கியிருக்காரு நிதியமைச்சர்.கவலை வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X