கஞ்சா 'சப்ளை' : கார் டிரைவர் தலைமறைவு | சென்னை செய்திகள் | Dinamalar
கஞ்சா 'சப்ளை' : கார் டிரைவர் தலைமறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
00:40

சூளைமேடு: சூளைமேடில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த, வருமான வரித்துறை அதிகாரியின் கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


சூளைமேடு, அண்ணா நெடும்பாதை, பெரியார் பாதை சந்திப்பு அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 25 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.


அதிகாரியின் கார்




கொரட்டூர், சீனிவாசன் தெருவைச் சேர்ந்த வாணி, 34 மற்றும் அவரது இரண்டாவது கணவர் பிரகாஷ், 38 ஆகியோரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக முருகன் தெரிவித்தார். இதையடுத்து, கொரட்டூர் சென்ற போலீசார், வாணியை கைது செய்ததுடன், அவரது வீட்டில் இருந்து, 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பி ஓடிய பிரகாஷை தேடி வருகின்றனர்.


தொடர் விசாரணையில், பிரகாஷ், தனியார் நிறுவனம் ஒன்றில் வாடகை கார் ஓட்டுனராக பணி புரிந்து வந்தது தெரிய வந்தது. அந்நிறுவனம் வாயிலாக, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த வருமான வரித்துறை உயர் அதிகாரிக்கு கார் ஓட்டி வந்துள்ளார். அந்த அதிகாரி, திண்டுக்கல் மாவட்டம் பழநிக்குச் சென்றதை அடுத்து, பிரகாஷ், அவரது காரை கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தியதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


விசாரணை




மேலும், ஆந்திர மாநிலத்திலிருந்து, கஞ்சா வினியோகிக்கும் செய்யும் கும்பலுக்கும், பிரகாஷுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அவருக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? என்ற வகையிலும் விசாரிக்கின்றனர். மேலும், வருமான வரித்துறை அதிகாரி பயன்படுத்திய காரை, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தினாரா?, எத்தனை நாட்களாக இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்டார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தலைமறைவாக உள்ள பிரகாஷ் கைது செய்யப்பட்ட பின்னே, இது குறித்த முழு விபரம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X