சென்னை விமான நிலையத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
சென்னை விமான நிலையத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
00:44

சென்னை: சென்னை விமான நிலையத்தை, போக்குவரத்து சேவைக்காக ஒரே நாளில், 26 ஆயிரத்து 397 பேர் பயன்படுத்தி உள்ளனர். இது விமான சேவை மீது மக்களுக்கான நம்பிக்கையை காட்டுகிறது. இது குறித்து, இந்திய விமான நிலையங்களின் ஆணையம், தன் 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட விபரம்:


கொரோனா இரண்டாவது அலைக்குப் பின், பாதுகாப்பான போக்குவரத்து சேவையாக, விமான சேவை பயணியரிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தை, போக்குவரத்து சேவைக்காக, அதிக பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.


குறிப்பாக, ஆக., 1ம் தேதி, உள்நாட்டு போக்குவரத்து சேவையின் கீழ், பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு வருவதற்காக, 100 விமானங்களில், 13 ஆயிரத்து 556 பேர் பயணித்தனர். அதே போல், சென்னையிலிருந்து, பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் செல்வதற்காக, 100 விமானங்களில், 12 ஆயிரத்து 841 பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம், ஒரே நாளில், மொத்தம் 26 ஆயிரத்து 397 பயணியர், சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். சமீப காலத்தை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிக அதிகமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X