'சைமா' - பவர்டேபிள் சங்கம் இடைக்கால ஒப்பந்தம் ஓ.கே., பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
01:21

திருப்பூர்:பின்னலாடை டஜன் ஒன்றுக்கு 6 ரூபாய் கட்டண உயர்வு வழங்க, 'சைமா' - பவர்டேபிள் சங்கங்கள் இடையே, இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது.திருப்பூரில், 'சைமா' - பவர்டேபிள் சங்கம் இடையே, கடந்த 2016ல் ஏற்படுத்தப்பட்ட பவர்டேபிள் கட்டண உயர்வு ஒப்பந்தம், 2020, அக்டோபரில் காலாவதியானது. பேச்சு வார்த்தைக்கு 'சைமா' சங்கம் அழைக்காததால், கடந்த ஜூலை 28 ம் தேதி முதல், பவர்டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கின.உள்நாட்டு சந்தைக்கான ஆடை உற்பத்தி முடங்கியது, பேச்சுவார்த்தை நடத்த, பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்துக்கு, 'சைமா' அழைப்பு விடுத்தது. இதனால், 'சைமா' அரங்கில் நேற்று நடந்தது.'சைமா' தரப்பில், சங்க தலைவர் ஈஸ்வரன், துணை தலைவர் கோவிந்தப்பன், பொது செயலாளர் பொன்னுசாமி, இணை செயலாளர் சசி அகர்வால், பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் தரப்பில், அதன் தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், துணை செயலாளர் முருகேசன், துணை தலைவர் பொன் சங்கர், பொருளாளர் சுந்தரம் பங்கேற்றனர்.நாள் ஒன்று; சுற்று இரண்டுஇரு சங்க நிர்வாகிகள் மத்தியில், மதியம், 12:30க்கு துவங்கி, இரவு, 8:00 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. முதல் சுற்று பேச்சில், காரசார விவாதங்கள் முடிந்த நிலையில், மாலையில் துவங்கிய இரண்டாவது சுற்றில், இருதரப்பு சங்கத்தினரும் இணக்கமான முறையில் பேசினர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால், போக்குவரத்து செலவினம் அதிகரித்துள்ளன. நுால் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, நடப்பு கட்டணத்திலிருந்து, டஜனுக்கு 6 ரூபாய் கட்டண உயர்வு அளிப்பது என, முடிவு செய்யப்பட்டது.இதையேற்று, 'சைமா' மற்றும் பவர்டேபிள் சங்கத்தினர், இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனால், ஆறு நாள் நடந்த சங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இன்று விடுமுறை. நாளை முதல், மீண்டும் இயக்கத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.நாளை தொழிலாளருக்கு... பனியன் தொழிலாளர் சம்பள உயர்வுக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை, 'சைமா' அரங்கில் நாளை மாலை, 4:30 மணிக்கு துவங்குகிறது. 80 சதவீத சம்பள உயர்வு உட்பட 16 அம்ச கோரிக்கைகளை தொழிற் சங்கங்கள் முன்வைத்துள்ளன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X