'டாம்கோ' கடன் முகாம் இன்று துவங்குகிறது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
'டாம்கோ' கடன் முகாம் இன்று துவங்குகிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
01:23

திருப்பூர்:மாவட்டத்தில், 'டாம்கோ' கடன் திட்ட முகாம் இன்று துவங்கி 6ம் தேதி வரை, காலை, 10:30 முதல், 12:00 மணி வரை ஒரு பிரிவாகவும், மதியம், 2:30 முதல், மாலை 5:00 மணி வரை மற்றொரு பிரிவாகவும் நடக்கிறது.திருப்பூர் நகர கூட்டுறவு வங்கியில், திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு, இன்று காலையும், தெற்கு தாலுகாவுக்கு, மதியமும் அவிநாசி தாலுகாவுக்கு, பழங்கரை கூட்டுறவு சங்கத்தில், இன்று காலை நடக்கிறது.ஊத்துக்குளி தாலுகா - ஊத்துக்குளி கூட்டுறவு சங்கம், பல்லடம் - பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், தாராபுரம் - தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியிலும், நாளை (4ம் தேதி) காலை முகாம் நடக்கிறது.உடுமலை - நகர் கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம்- கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், 5ம் தேதி காலையும், காங்கயம் - ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், 6ம் தேதி காலையும் கடன் மேளா நடக்கிறது.விவரங்களுக்கு, சிறுபான்மையினர் நல அலுவலரை, 94454 77854 என்ற எண்களிலும், dbcwotpr@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X