'தூய்மை பாரதம் 2.0' திட்டத்தில் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'தூய்மை பாரதம் 2.0' திட்டத்தில் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்
Added : ஆக 03, 2021 | |
Advertisement
 

கோவை,:'துாய்மை பாரதம் 2.0' திட்டத்தில், கோவை மாநகராட்சியில் கட்டட கழிவு மறுசுழற்சி மையம் கட்டுவதற்கான நிதியை, மத்திய அரசு ஒதுக்க, முடிவு செய்துள்ளது.கோவை நகர் பகுதியில் நாளொன்றுக்கு, 850 டன் முதல், 1,000 டன் வரை குப்பை சேகரமாவதாக கணக்கிடப்படுகிறது. இதில், 100 டன் கட்டட கழிவுகளாக இருக்கிறது.அவற்றை பொதுமக்கள், கண்காணிப்பு இல்லாத சமயங்களில், ஆங்காங்கே ரோட்டோரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இல்லையெனில், குளக்கரையில் கொட்டுகின்றனர். இதற்கு தீர்வு காண, கட்டட கழிவு மறுசுழற்சி மையம் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 15 ஏக்கர் ஒதுக்கி, சுற்றுச்சுவர் கட்டி, ரோடு போடப்பட்டது. ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம், இயந்திரங்கள் தருவிக்க தாமதித்ததால், புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. உக்கடம் பாலம் பணிக்காக, சி.எம்.சி., காலனி வீடுகள் இடிக்கப்படுகின்றன.அடுத்த கட்டமாக, திருச்சி ரோடு பாலத்துக்காக, வாலாங்குளம் பைபாஸில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட உள்ளன. இடிக்கப்படும் கட்டட கழிவுகளை, மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மைக்காக, 'துாய்மை பாரதம்' திட்டத்தில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்குகிறது.நடப்பாண்டு, 'துாய்மை பாரதம் 2.0' என அறிவித்து, கோவை மாநகராட்சியில் கட்டட கழிவு மறுசுழற்சி மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்குவதாக, வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், ''துாய்மை பாரதம் 2.0 திட்டத்தில், கட்டட கழிவு மறுசுழற்சி மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க, மத்திய அரசு முன்வந்துள்ளது. எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என்பது இறுதி அறிக்கை வெளியிடும்போது தெரியவரும். நிதி அறிவிப்பு வந்ததும், அம்மையம் கட்டப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X