நிலம் கையகப்படுத்த ... தனியாக ஒரு டி.ஆர்.ஓ.,! நியமிக்க எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 ஆக
2021
02:23
பதிவு செய்த நாள்
ஆக 03,2021 01:27

கோவை:கோவையில், அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த, டி.ஆர்.ஓ., அந்தஸ்தில் தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



கோவை மாநகராட்சி பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை தவிர, பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், பாலம் பணிகள், மேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கப் பணி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.இதில், சில திட்டங்களுக்கு வருவாய்த்துறையில் இருந்து, நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டிய, கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியில், உக்கடம், கரும்புக்கடை மற்றும் ஆத்துப்பாலம் பகுதியில் நிலம் கையகப்படுத்த வேண்டும்.



அவிநாசி ரோடு பாலம் பணிக்கு, ரோட்டின் இருபுறமும், 8 வார்டுகளில், 500 நில உரிமையாளர்களிடம், 24 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்தில், பவானி ஆற்றில் இருந்து பன்னிமடை வரை, 35.22 கி.மீ., துாரத்துக்கு பிரதான குழாய் பதிக்க வேண்டும்.குழாய் பதிக்க, 2 மீட்டர், சர்வீஸ் ரோடு அமைக்க, 13 மீட்டர் என, 15 மீட்டர் அகலத்துக்கு நிலம் தேவை. மொத்தம், 174.42 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும்.



இதில், பிரதான குழாய் பதிக்கவும், நீருந்து நிலையம் கட்டவும், 1,470 விவசாயிகள் நிலம் தேவை.சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்த, 627.89 ஏக்கர் கையகப்படுத்த வேண்டியது அவசியம். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, இந்திய விமான நிலைய ஆணையம் பெயருக்கு மாற்ற வேண்டியுள்ளது.மேற்குப்புற வழிச்சாலை திட்டத்துக்கு, 355.5 ஏக்கர் நிலம், 16 கிராமங்களில் கையகப்படுத்த வேண்டும். கிழக்கு புறவழிச்சாலைக்கு வழித்தடம் உருவாக்கப்பட்டு, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


அத்திட்டத்தை துாசி தட்டி, நிதி ஒதுக்கீடு பெற்று, நிலம் கையகப்படுத்தி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். காளப்பட்டி - குருடம்பாளையம் சாலையை நான்கு வழியாக்கும் திட்டத்திலும், தேவையான நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.கோவைக்கு மிக முக்கியமான இத்திட்டங்களுக்கு தேவையான நிலங்களை, வருவாய்த்துறையினர் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியம்.



அத்துறையினர் தாமதிப்பதால், திட்ட பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகின்றன.நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி தரப்பில், ஓய்வு பெற்ற தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை கொண்டு, கையகப்படுத்த வேண்டிய நிலங்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து, மதிப்பீடு தயாரித்து, கோப்புகள் தயாரித்துக் கொடுத்தாலும், வருவாய்த்துறையில் தாமதமாகிறது. தண்ணீர் பந்தல் ரோடு பாலம், எச்.ஐ.எச்.எஸ்., காலனி பாலங்களுக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தி கொடுக்காத ஒரே காரணத்தில், பல ஆண்டுகளாக பாதியில் நிற்கின்றன.



நிலம் கையகப்படுத்த, டி.ஆர்.ஓ., அந்தஸ்தில் இதற்கு முன் இருந்த அதிகாரி இட மாறுதலாகி சென்றபின், புதிய அதிகாரி நியமிக்கப்படவில்லை.ரெகுலர் டி.ஆர்.ஓ., பொறுப்பில் இருப்பவர்களே, கூடுதலாக இப்பணியையும் செய்ய வேண்டியுள்ளது. அதனால், நிலம் கையகப்படுத்த தனி டி.ஆர்.ஓ., நியமிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X