மருதமலை கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
01:29

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், பக்தர்களின்றி ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது.வழக்கமாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகைஅன்று, வள்ளி தெய்வானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி, தங்க மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி, பால் குடங்களை எடுத்து வருவார்கள். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, இன்று மற்றும் 8ம் தேதி, பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன் காரணமாக, ஆடிக்கிருத்திகை தினமான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி தங்க கவசங்களுடன் காட்சியளித்தார். பக்தர்களின்றி, கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு கேட்டில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். இன்று, ஆடிப்பெருக்கு தினத்தன்றும், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படித்துறையில் தர்ப்பணம் செய்யவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X