99 ஆடுகள், 540 சேவல்களை வெட்டி அம்மனுக்கு படையல் | மதுரை செய்திகள் | Dinamalar
99 ஆடுகள், 540 சேவல்களை வெட்டி அம்மனுக்கு படையல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:05

மேலுார் -மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி மேலுார் வீரசூடாமணிபட்டி ஐந்து முழி அழகி அம்மன் கோயிலில் 99 ஆடுகள், 540 சேவல்களை வெட்டி படையல் இட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு வழிபாடு நடந்தது.இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 26 முதல் பக்தர்கள் காப்பு கட்டி 8 நாட்கள் விரதமிருந்தனர். நேற்று கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிபட்டியை சேர்ந்த பக்தர்கள் ஆடுகள், சேவல்களை காணிக்கையாக கொடுத்தனர். அவற்றை வெட்டி மண்பானையில் இட்டு அம்மனுக்கு படைத்தனர். பின் காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையலில் இட்ட பிரசாதம் பிரித்து கொடுக்கப்பட்டது. ஏராள மானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X