கடலூர் டெல்டா பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்குமா? கொள்ளிடம் கீழணை நிரம்பாததால் விவசாயிகள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:39

கடலுார் : மேட்டூர் அணையில்முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் கீழணைக்கு போதுமான தண்ணீர் வராததால், கடலுார் மாவட்ட டெல்டாபாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



கடலுார் மாவட்டம்சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி வட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் காவிரிடெல்டாபாசனம்நடக்கிறது. பருவ மழை பொய்த்தது, மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்காதது போன்றகாரணங்களால்கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டது. ஒரு போக சம்பா சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு டெல்டா விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.



இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பரவலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்வதால் மேட்டூர் அணைக்கு போதிய அளவில் தண்ணீர் வந்தது. இதனால், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.அதற்கேற்ப மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் (ஜூன் 12ம் தேதி) தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை குறுவை, அக் டோபரில் துவங்கி ஜனவரி வரையிலான காலத்தில் சம்பா ஆகிய இரு போக சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.



டெல்டா பகுதியில் மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகள் உழவு ஓட்டுவது, நாற்று விடுவது, வளர்ந்த நாற்று பறிப்பது உள்ளிட்ட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். டெல்டா பாசன பகுதி கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்கள் துார்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மேட்டூருக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால், அதன் கொள்ளளவு 80 அடியாக சரிந்து தேவையான தண்ணீர்திறக்கவில்லை. இதனால், ஜூன் மாத இறுதியிலேயேவர வேண்டிய தண்ணீர்கீழணை மற்றும் வீராணம் ஏரிக்கு தற்போது வரை வரவில்லை.



கீழணையின் மொத்த கொள்ளளவான 9 அடியில் தற்போது 4.7 அடி அளவே நிரம்பியதால் அங்கிருந்து வீராணத்திற்கு குறைந்த தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 44 அடி கூட நிரம்பவில்லை.வழக்கமாக ஜூலைமாதம் இரண்டாவது வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.



இதனால் ஏரியிலிருந்து பாசனம் பெறும் டெல்டா பகுதிகளில் குறித்த காலத்தில் தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புழுதி உழவு செய்து நேரடி விதைப்பிற்கு தயாரான விவசாயிகள் சம்பா போக சாகுபடி செய்வது கேள்விக்குறியாக உள்ளது.



இந்நிலையில், கடந்த மாத இறுதியில் கடலுாரில் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் பேசுகையில், காவிரியில் போதிய நீர் வரத்து இல்லாததால் மேட்டூர் அணை நிரம்பவில்லை. இதனால் கீழணைக்கும் போதிய தண்ணீர் வரவில்லை. ஆகஸ்ட் முதல் துவங்கும் சம்பா பருவ சாகுபடி நடைபெறுமா என்ற அச்சம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.



ஒரு போக சாகுபடியை உறுதி செய்யும் வகையில் தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் கேட்டு விநியோகிக்க தமிழக அரசிற்குகலெக்டர்அழுத்தம்தரவேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X