செய்தி சில வரிகளில்.. | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
செய்தி சில வரிகளில்..
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:46

கொரோனா விழிப்புணர்வு

விக்கிரவாண்டி: பேரூராட்சி சார்பில் நடந்த கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்திற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று வினியோகித்தனர்.துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன் மேற்பார்வையாளர் ராமலிங்கம், பதிவறை எழுத்தர் சேகர், நோய் தடுப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.பா.ஜ., மண்டல பயிற்சி முகாம்


திருவெண்ணெய்நல்லுார்: மண்டல பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். பிரபாவதி சந்திரபிரகாஷ், வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு பிரிவு தலைவர் தென்னரசு, மாவட்ட அரசு பிரிவு செயலாளர் புருேஷாத்தம்மன் வரவேற்றனர்.கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு பிரிவு தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.செயற்குழுக் கூட்டம்


அவலுார்பேட்டை: அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் டாக்டர் ரவி தலைமை தாங்கினார். குருசாமிகள் சின்னராஜூலு, பழனி, மாவட்ட துணைச் செயலாளர் பச்சையப்பன், ரவிச்சந்திரன், முருகன், விக்ரமன் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் பால கணேஷ் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் செந்தில்குமார், ஆறுமுகம், சத்தியநாதன், பழனி, சண்முகம் பங்கேற்றனர். கூட்டத்தில், புரட்டாசி மாத சேவை, மாவட்ட தேர்தல், சபரிமலை அன்ன தானம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்


சங்கராபுரம்: பா.ஜ., சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மூர்த்தி பேசினார். ரவி, செல்வ கணபதி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சந்திரமோகன் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 'இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்' நிகழ்ச்சி அனைத்து ஊர்களிலும் எப்படி செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஒன்றிய செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.விழிப்புணர்வு பிரசாரம்


சங்கராபுரம்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமை தாங்கி, முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம், சமூக இடைவெளியை கடை பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் குறித்தும், பள்ளி மாணவர்களிடையே கொரோனா பற்றி வினாடி வினா மற்றும் ஓவிய போட்டி நடத்துவது குறித்தும் பேசினார்.தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பிரசார ஊர்தி சென்றது. பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, ஆய்வாளர்கள் சரவணன், முருகன், கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டம்


சின்னசேலம்: நீட் நுழைவுத் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து உழவர் தொழிலாளர் பேரியக்கம் சார்பில் சின்னசேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, உழவர் தொழிலாளர் பேரியக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறிவழகன், முருகேசன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்ப்பது. புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆலோசனைக் கூட்டம்


திண்டிவனம்: வடக்கு மாவட்ட சேவாதளம் சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சேவாதள தலைவர் சசிக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மாநில சேவாதள தலைவர் விஜயன் ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில், திண்டிவனம் நகர தலைவர் வினாயகம், மாவட்ட பொருளாளர் கருணாகரன், வட்டார தலைவர்கள் கண்ணன், காத்தவராயன், சுப்ரமணி, நிர்வாகிகள் செல்வம், தேவசகாயம், நகர துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.உறுதிமொழியேற்பு


கண்டமங்கலம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில், டாக்டர்கள் பிரகாஷ், கார்த்திகா பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.கைகளை துாய்மையாக வைத்துக் கொள்வோம், முகக் கவசம் அணிவோம், சமூக இடைவெளியை கடைபிடிப்போம், அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவோம் என அனைவரும் உறுதிமொழியேற்றனர். நிகழ்ச்சியில் பகுதி சுகாதார செவிலியர் இந்திரா, மருத்தாளுனர் நாகராஜ், சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.மரக்கன்று நடும் விழா


திருக்கோவிலுார்: ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் விழாவில், தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் முரளிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.விழாவில் சிறப்பு விருந்தினர் டி.எஸ்.பி., மணிமொழியன் அப்துல் கலாமின் நினைவுகள் குறித்து சிறப்புரையாற்றி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆசிரியர்கள் வாஞ்சிநாதன் ராபர்ட் சகாயராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் சசிகுமார் நன்றி கூறினார்.துண்டு பிரசுரம் வழங்கல்


சின்னசேலம்: சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா மூன்றாவது அலையிலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், கடையின் முன் கைகழுவ தண்ணீர், சோப்பு, கிருமி நாசினி உள்ளிட்டவைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சார்லஸ், மாயக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கொரோனா விழிப்புணர்வு


திண்டிவனம்: திண்டிவனம் கல்வி மாவட்டம் சார்பில் நடந்த கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை சப் கலெக்டர் அமித், திண்டிவனத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, டவுன் டி.எஸ்.பி., கணேசன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சாந்தி ஆகியோர் பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.நிகழ்ச்சியில், பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், ஒலக்கூர் வட்டார கல்வி அதிகாரி கோவர்த்தனன், ஜே.ஆர்.சி.சாரணர் இயக்க நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், ஸ்ரேயன்குமார், தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் தேர்வு


விக்கிரவாண்டி: ஒன்றிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துாய்மைப் பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் பனையபுரத்தில் நடந்தது. வட்டார தலைவர் அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார், இளையராஜா, துணைத் தலைவர்கள் முருகன், நீலமேகம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசாமி, அந்தோணிதாஸ் சிறப்புரையாற்றினர்.வட்டார தலைவராக அன்பு, செயலாளராக குருநாதன், பொருளாளராக ஜெயா, துணை தலைவராக ஏகாந்தவாசன், இணைச் செயலாளராக இந்திரா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X