விதிமுறை மீறும் புதுச்சேரி மாநில பஸ்களால் வருவாய் இழப்பு! பர்மிட் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:48

விழுப்புரம் : புதுச்சேரி மாநில சுற்றுலா பர்மிட் பெற்று மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக தமிழக பகுதிகளில் ஓட்டிய நான்கு ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பஸ் உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆடி மாதத்தையொட்டி, சுற்றுலா பயணிகளை கோவில்களுக்கு ஏற்றி செல்வதற்காக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழக்கம் போல் காலாண்டு வரியாக 45 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.அது மட்டுமின்றி, இவர்கள் சுற்றுலாவுக்கு பஸ் எடுத்துச் செல்லும் போது, ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் செலுத்தி சுற்றுலா பர்மிட் தனியாக பெற வேண்டும்.



ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பர்மிட் பெற 150 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.இதனை பயன்படுத்தி, தமிழக பதிவெண் கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த பஸ் உரிமையாளர்கள் தமிழக பகுதியில் சுற்றுலா பர்மிட் எடுக்காமல் புதுச்சேரி சுற்றுலா பர்மிட்டை பெற்றுக் கொண்டு தமிழக பகுதிகளில் பஸ்களை இயக்குகின்றனர்.இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலுார், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் புதுச்சேரி மாநில சுற்றுலா பஸ்கள் இயக்கப்படுகின்றன.



இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது மட்டுமின்றி தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கின்றனர். இங்கு அரசுக்கு முறையாக வரி செலுத்திய உரிமையாளர்கள் பாதிப்பதாகவும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விழுப்புரம் தாலுகா பஸ் உரிமையாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.இதையொட்டி, துணை போக்குவரத்து கமிஷனர் நெல்லையப்பன் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் வாகன தணிக்கை செய்தனர்.



அதில், சட்டத்திற்கு புறம்பாக, புதுச்சேரி மாநிலத்தில் இயக்கப்படும் வாகனங்களில் அங்கு சுற்றுலா பர்மிட் பெற்று பயணிகளை ஏற்றிச் சென்ற 4 பஸ்களின் உரிமையாளர்களுக்கு வரி மற்றும் அபராதமாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இது மட்டுமின்றி, மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து இதே போல், தமிழக சுற்றுலா பர்மிட் இன்றி வந்த பஸ்சுக்கு 70 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதித்தனர்.



இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பர்மிட் பெற்று கொண்டு, பஸ் உரிமையாளர்கள் தமிழகத்தில் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே ஓட்ட வேண்டும். மீறி தமிழகப் பகுதிகளில் ஓட்டுவது கண்டறியப்பட்டால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் அந்த வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X