2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி; விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி; விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:52

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குடும்பத்தினர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த திருவாமாத்துாரைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 75; விவசாயி. இவர் குடும்பத்தினர் ஒன்பது பேருடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவர்கள் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார், தடுத்து விசாரித்தனர்.



மாரிமுத்து கூறுகையில்,'எங்கள் வீட்டு மனையை அளந்து வீடு கட்டுவதற்கு சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் தடுத்து மிரட்டுகின்றனர். கட்டடப் பணிக்கு வருபவர்களையும் தாக்குகின்றனர். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நாங்கள் வீடு கட்டி வசிக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றார்.போலீசார் அவர்களை எச்சரித்து, கலெக்டரிடம் மனு அளிக்கும்படி அனுப்பி வைத்தனர்.



மற்றொரு சம்பவம்




விழுப்புரம் அடுத்த ஆலத்துாரைச் சேர்ந்தவர் பரமசிவம், 48; இவர் குடும்பத்தினர் 3 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். நான்கு பேரும் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து, விசாரித்தனர்.பரமசிவம் கூறுகையில், 'ஆலத்துார் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்பரேட்டராக பணிபுரிகிறேன். 2014ல் பணிநீக்கம் செய்யப்பட்டேன். வழக்கு தொடர்ந்து, 2019ல் பணியில் சேர்ந்தேன். ஆனால், எனக்கு அரசால் வழங்கிய போனஸ், பணி உபகரணங்கள், சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லை' என்றார்.



அவரிடம் மனு அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.கோட்டை விட்ட போலீஸ்'டோஸ்' விட்ட டி.எஸ்.பி.,கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வரை நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மனு அளிக்க வருபவர்களின் உடைமைகளை தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.



சிறிதுநேரம் பணியை செய்த போலீசார், 10:30 மணிக்கு மேல், மொபைல் போன் பார்ப்பதில் கவனம் செலுத்தினர். இதனால், 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றனர். போலீசாரின் அலட்சியப் போக்கை அறிந்த டி.எஸ்.பி., பழனிசாமி, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாருக்கு 'டோஸ்' விட்டார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X