மனைவியின் கைகளை வெட்டிய இன்ஜினியர் துாக்கிட்டு தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:56

நெய்வேலி : என்.எல்.சி.,இன்ஜினியர் தனது மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி துண்டாக்கி விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்துள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் ஸ்ரீ உத்தண்டராயன், 47; என்.எல்சி., முதல் சுரங்கத்தில் எலக்ட்ரிக்கல் டிவிஷனில் இன்ஜினியராக பணிபுரிந்தார். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 12ல் உள்ள சரோஜினி நாயுடு சாலையில் குடும்பத்துடன் வசித்தார். இவரது மனைவி ஜெயசித்ரா, 45; இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.



கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று மாலை 4:00 மணியளவில் வீட்டிலிருந்த ஜெயசித்ராவின் 2 கைகளையும் ஸ்ரீ உத்தண்டராயன் கட்டினார்.பின் அவரது இரண்டு மணிக்கட்டுகளிலும் கத்தியால் வெட்டினார். இதில் அவரது 2 கைகளும் துண்டாகி விழுந்தது. ஜெயசித்ரா கூச்சலிட்டதால் பயந்த ஸ்ரீ உத்தண்டராயன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.



டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார், ஸ்ரீஉத்தண்டராயன் மற்றும் ஜெயசித்ரா ஆகியோரை என்.எல்.சி.,மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயசித்ரா மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



அவரது இரண்டு கைகளும் ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாப்பாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஸ்ரீஉத்தண்டராயன் உடலை பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X