கர்ப்பமாக்கி ஏமாற்றியவரை கரம் பிடித்த பட்டதாரி பெண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:58

திண்டிவனம் : பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு, அப்பெண்ணுடன் மகளிர் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த குருவம்மா பேட்டையைச் சேர்ந்தவர் வாசுகி, 31; பி.ஏ., பட்டதாரி. மதுராந்தகம் அடுத்த பிச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமல்ராஜ், 32; டிப்ளமோ முடித்து, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இருவருக்கும் திருமணம் செய்ய ஜாதகம் பார்த்து, பொருத்தம் இல்லாததால் நிறுத்தப்பட்டது. பெண் பார்த்தபோது மொபைல் போன் எண்களை பரிமாறிக் கொண்டதன் மூலம் பேசி பழகினர்.



இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.இதில் வாசுகி கர்ப்பம் அடைந்தார். திருமணம் செய்து கொள்ளும்படி வாசகி கேட்டதும், பழகுவதை கமல்ராஜ் தவிர்த்தார். மேலும், வேறு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததை அறிந்த வாசுகி, திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் ஜூலை 27ல் புகார் அளித்தார்.



போலீசார் விசாரித்து, கமல்ராஜ் திருமணம் செய்ய இருந்த பெண் வீட்டிற்குச் சென்று, வாசுகியின் தொடர்பு குறித்து கூறி திருமணத்தை தடுத்தனர். நேற்று திண்டிவனம் மகளிர் போலீசில் ஆஜரான கமல்ராஜ், வாசுகியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.தொடர்ந்து, மகளிர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கற்பக விநாயகர் முத்துமாரியம்மன் கோவிலில், போலீசார் முன்னிலையில் திருமணம் நடந்தது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X