கத்தியால் கிழித்து தப்பிய மர்ம நபர்கள் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
கத்தியால் கிழித்து தப்பிய மர்ம நபர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
01:25

கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் அருகே வாலிபரிடம் செல்போனை பறித்த போது தடுக்க முயன்றவர் வயிற்றை கத்தியால் கிழித்துவிட்டு தப்பிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


ஆரம்பாக்கம் அருகே எகுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் நாகூர், 50. அவரது வீட்டில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மகிந்தர், 30, என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.


சம்பவத்தன்று மாலை, பைக் ஒன்றில் வந்த மூன்று மர்ம நபர்கள், மகிந்தரிடம் கத்தி முனையில் மொபைல்போனை பறித்து தப்ப முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடிக்க, நாகூர் முயன்றார். அப்போது, நாகூரின் வயிற்றை கத்தியால் கிழித்து விட்டு மூவரும் தப்பிச் சென்றனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் மருத்துவ மனையில், நாகூர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X