போலீஸ் டைரி: திருவள்ளூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
01:33

3 பசு, 3 கன்றுகள் பலி


நகரி: சித்துார் மாவட்டம் சத்தியவேடு, ராஜப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி, 40. இவர், மூன்று பசுக்களை பராமரித்து வந்தார். அதே போல், அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர், சுப்பையா, சக்கரவர்த்தி ஆகிய மூவரும், தலா, ஒரு பசுக்கன்று வீதம் வளர்ந்து வந்தனர். மேற்கண்ட நான்கு பேரும், தன் கால்நடைகளை மேய்ப்பதற்காக கிராம வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றனர். வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென மின்சார கம்பி அறுந்து விழுந்ததில், மூன்று பசுக்கள், மூன்று கன்றுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தன.



பெண் தற்கொலை


நகரி: சித்துார் மாவட்டம் நகரி அடுத்த, சீலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி ஜெயலட்சுமி, 25. இவருக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த மாதம், ஜெயலட்சுமிக்கு பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் இறந்தது. இதனால், மன வேதனையுடன் இருந்த ஜெயலட்சுமி, வீட்டில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



ஏரியில் மூழ்கி மாணவர் பலி


நகரி: சித்துார் மாவட்டம் பிச்சாட்டூர் அடுத்த, நீர்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமாத்ரி, 11. இவர், அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஹேமாத்ரி, நண்பர்களுடன் நீர்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது ஏரியில் மூழ்கி மாணவர் ஹேமாத்ரி இறந்தார். பிச்சாட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.




விபத்தில் பெண் பலி



நகரி: சித்துார் மாவட்டம் கங்காதரநெல்லுார் அடுத்த, கோட்டகாரம் காலனியைச் சேர்ந்தவர் தியாகராஜன் மனைவி சைலஜா, 26. கணவரும், மனைவியும் இரு சக்கர வாகனத்தில், சித்துார் பஜாருக்குச் சென்று கொண்டிருந்த போது, பட்டுகண்டிகை அருகே எதிரே வந்த கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சைலஜா, சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த தியாகராஜன், திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் தான் திருமணம் நடந்தது. கங்காதரநெல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X