சம்பளம் வழங்காததை கண்டித்து | கடலூர் செய்திகள் | Dinamalar
சம்பளம் வழங்காததை கண்டித்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
05:59

கடலுார் : சம்பளம் வழங்காததை கண்டித்து, கடலுார் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடலுார் சிப்காட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் குடோனில் 60க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு கடந்த மே மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்க கோரியும், கடலுார் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில், டாஸ்மாக் குடோன் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., சிறப்பு தலைவர் சுப்புராயன், நிர்வாகிகள் தண்டபாணி, சுந்தர், மோகன், கோவிந்தன், சண்முகம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X