விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
06:03

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.



உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துப்புரவு அலுவலர் சக்திவேல், மேலாளர் அண்ணாதுரை, தாசில்தார் உதயகுமார், அனைத்து தொழில் வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், வணிகர்கள் மற்றும் தொழில்புரிவோர் சங்க தலைவர் ஷேக்தாவூத், சேவா பாரதி நகர செயலாளர் அம்சா பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். புகையிலை பொருட்களை பயன்படுத்த மாட்டோம், கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X