திண்டிவனத்தில் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
திண்டிவனத்தில்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
07:03

திண்டிவனம் : திண்டிவனத்தில் வீடு புகுந்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜெயபுரத்தைச் சேர்ந்தவர் கோகுல்தாஸ், 75; இவர், கடந்த மாதம் 11ம் தேதி தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். 16ம் தேதி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இந்திரா நகர் சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, அந்தவழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அதில், திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சேட்டு என்கிற பிரதீப் குமார், 24; என்பதும், கடந்த மாதம் கோகுல்தாஸ் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார்.அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X