விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
23:19

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடையில் கார்டுதாரர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும்.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்' அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருள் விநியோகத்தில் முறைகேட்டைத் தடுக்கும் வகையில், இம்மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.கார்டுதாரர்கள் பயோமெட்ரிக்கில் விரல் பதிந்து அத்தியாவசிய பொருள் பெறலாம். கடந்த மாதம் பிராக்சி முறையில் அதிகமான கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கியது தெரியவந்துள்ளது.கடைக்கு வர முடியாத முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு விரல் பதிவின்றி பொருட்கள் பெறும் வகையில், மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் அனுமதி பெற்று பிராக்சி முறையில் பொருள் வழங்கலாம்.பணியாளர்கள் பிராக்சி முறையை தவிர்த்து, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க வேண்டும். பிராக்சி முறையில் பொருள் வழங்கும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X