கல்பட்டு ஏரியில் மீன்பிடி திருவிழா போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
23:24

விழுப்புரம்-விழுப்புரம் அருகே ஏரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மக்களை போலீசார் விரட்டியடித்தனர்.விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் 200 ஏக்கர் அளவில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் தற்போது 50 ஏக்கர் பரப்பளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரி தண்ணீர் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்வதோடு, மீன் குஞ்சுகளும் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது.பொதுப்பணித்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் மீன் குத்தகை ஏலம் விடப்படும். தொடர்ந்து, மீன்பிடி திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஏரியில் சில தினங்களுக்கு முன் மீன் குத்தகை ஏலம் முடிந்த நிலையில், மீன்பிடி திருவிழா நடைபெற இருந்தது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நடத்த தடை உள்ளது. இந்த சூழலில், நேற்று தடையை மீறி கல்பட்டு ஏரியை சுற்றியுள்ள கிராம மக்கள், கூடை, வலை, துணிகள் மூலம் மீன்பிடி திருவிழாவை நடத்தினர்.கல்பட்டு மட்டுமின்றி, சிறுவாக்கூர், தெளி, நத்தமேடு, ஒட்டன்காடுவெட்டி உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன் பிடித்தனர். அதில், கெண்டை, ஜிலேபி, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன்களை மக்கள் ஆர்வத்தோடு பிடித்தனர்.கொரோனா விதிமுறை மீறல், நோய் தொற்று பரவும் அச்சமின்றியும், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி மக்கள் போட்டி போட்டு ஏரியில் மீன்களை பிடித்துச் சென்றனர்.தகவலறிந்த காணை போலீசார், கல்பட்டு ஏரிக்கு சென்று, ஊரடங்கு அமலில் உள்ளதால் மீன்பிடி திருவிழா நடத்தகூடாது என கூறி, மக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.மக்கள் அதை பொருட்படுத்தாமல் மீன்களை பிடித்ததால், போலீசார் ஏரியில் இறங்கி அவர்களை விரட்டியடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இது தொடர்பாக காணை போலீசார் 300 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X