'சினிமா செட்' குடோனில் பயங்கர தீ விபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2021
04:07

மதுரவாயல்: மதுரவாயலில், சினிமா 'செட்' அமைக்கும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.


கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் சினிமா மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு செட் அமைத்து கொடுப்பது மற்றும் கட்டில், நாற்காலி, சோபா உள்ளிட்ட 'பர்னிச்சர்'களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வருகிறார்.


தடுப்புகள் உடைப்பு




தாம்பரம் - -மதுரவாயல் பைபாஸ், வானகரம் சர்வீஸ் சாலையில் குடோன் வாடகைக்கு எடுத்து, பொருட்களை வைத்துள்ளார். இங்கு 20க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். குடோனின் ஒரு பகுதியிலிருந்து புகை கிளம்பியது. கடையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்; ஆனால் பயனளிக்கவில்லை.திடீரென தீ கொழுந்து விட்டெரிய, ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.


தகவலறிந்து, கோயம்பேடு, வானகரம் மற்றும் பூந்தமல்லியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்ததால், கூடுதலாக விருகம்பாக்கம், கிண்டி, எழும்பூர், அம்பத்துர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து, 11க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 10க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டது.


ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, குடோனின் இரு பகுதிகளில் இருந்த தடுப்புகள் உடைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பொருட்கள் தீக்கிரைமேலும், 'ஸ்கைலிப்ட்' எனும் இரண்டு ராட்சத இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இதற்குள், தீ சினிமா செட் குடோனில் இருந்து, அருகில் உள்ள பழைய கார்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனுக்கு பரவியது. தீ ஜூவாலையின் அனல் அருகில் இருந்த, கிறிஸ்துவ பிரார்த்தனை மையம் மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பென்ஜமினின் அலுவலகத்திலும் பரவியதில், அங்கிருந்த பொருட்களும் தீக்கிரையாயின.


போக்குவரத்து பாதிப்பு




மேலும், சம்பவ இடத்தில் இருந்த பொருட்கள் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின. விபத்து குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பயங்கர தீ விபத்து காரணமாக, மதுரவாயல் பை - பாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் வானகரம் சர்வீஸ் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாதவாறு அடைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X