தண்ணீரில் மூழ்கும் வாழை: கண்ணீர் விடும் விவசாயிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2021
23:04

மேட்டுப்பாளையம்:பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 100 அடியை எட்டியதால், நீர்தேக்க பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 105 அடி. அணையில், 100 அடிக்கு நீர்மட்டம் உயரும் பொழுது, 24 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு வரை, பவானி ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும். பவானிசாகர் அணையில், 80 அடிக்கு கீழே தண்ணீர் குறைவாக இருக்கும் பொழுது, நீர்தேக்க பகுதியில் தண்ணீர் இல்லாமல் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில், விவசாயிகள் பயிர் செய்வது வழக்கம்.அவ்வகையில், 6 மாதங்களுக்கு முன், அணையில், 80 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தபோது, நீர்தேக்க பகுதிகளில், விவசாயிகள் பல லட்சம் வாழைகளை பயிர் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம், 100 அடியை எட்டியதால், அணை தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில், பயிர் செய்துள்ள ஏராளமான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. இன்னும் ஓரிரு மாதத்தில் வாழைத்தார்களை அறுவடை செய்யும் நிலையில், வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியதால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.சிறுமுகை மூளையூரைச் சேர்ந்த விவசாயி லெனின் கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இரண்டு வாரத்தில், 20 அடி தண்ணீர் உயர்ந்து, 100 அடியை எட்டியது. அணையின் நீர்தேக்க பகுதிகளில், பயிர் செய்துள்ள பல லட்சம் வாழைகள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன.பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்று வாழை பயிர் செய்துள்ளனர். சில வாழைத்தார்களில் உள்ள காய்கள் பிஞ்சாகவும், சிலவற்றில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. தண்ணீரில் வாழை மரங்கள் மூழ்கியதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr G Ranganathan - Coimbatore,இந்தியா
06-ஆக-202106:59:06 IST Report Abuse
Dr G Ranganathan Though it is a news and seemingly favouring affected farmers, the Reporter has missed the main point about whether the land is owned by farmers, cultivation is legitimate and has government not given compensation for dam usage
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X