சில வரி செய்திகள்: சென்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2021
02:38

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


மாதவரம்: மாதவரம், தட்டான்குளம் சாலை, லோட்டஸ் காலனி ஒன்றாவது தெருவில் உள்ள வீட்டின் முதல் தளத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அக்ரம், 24, என்பவர் வாடகைக்கு தங்கியிருந்தார். இவர் வீட்டின் குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்க முயன்றார். அப்போது, அவர் கையில் இருந்த இரும்பு கம்பி, அருகில் இருந்த மின் இணைப்பில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இது குறித்து மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



டூ வீலர்கள் தீக்கிரை


பெரும்பாக்கம்: பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் 95வது பிளாக்கில் விகேஷ், 25; மதியழகன், 32; வெற்றிவேல், 24; பூங்கொடி, 25, உள்ளிட்ட எட்டு பேர் வசிக்கின்றனர். இவர்கள், தங்களின் இரு சக்கர வாகனங்களை குடியிருப்பு வாசலில் நிறுத்தியிருந்தனர். திடீரென எட்டு பேரின் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


நிதி நிறுவன கண்ணாடி உடைப்பு


மணலிபுதுநகர்: மணலிபுதுநகரில், பிரபல தனியார் நிதி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் பின், லாரி ஓட்டுனர்கள் தங்கும் அறைகள் உள்ளன. அங்கு தங்கிய இரு லாரி ஓட்டுனர்கள், குடி போதையில் நிதி நிறுவனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இது குறித்து விசாரித்த மணலிபுதுநகர் போலீசார், லாரி ஓட்டுனர்களான, தென்காசியைச் சேர்ந்த முத்துகுமார், 23; மகாதேவன், 22, ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்கு பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.



நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தல்


எம்.கே.பி.நகர்: சென்னை, கொடுங்கையூர், கே.கே.டி.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 50; லாரி டிரைவர். இவர், கொருக்குப்பேட்டை 'கூட் செட்'டில் இருந்து 25 டன் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி, எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யு சாலையில், லாரியை நிறுத்திச் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது, நெல் மூட்டைகளுடனான லாரி இல்லாததால், எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.




வீட்டை விட்டு சென்ற சிறுமியர் மீட்பு


கோயம்பேடு: கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ஷீலா, 33. தனியார் பள்ளியில் ஆயாவாக இருக்கிறார். இவருக்கு, 13 மற்றும் 16 வயதில் இரு மகள்கள் உள்ளனர். படிப்பு சம்பந்தமாக இருவரையும் தாய் ஷீலா திட்டியுள்ளார். இதில் கோபித்துக் கொண்ட சிறுமியர் இருவரும், தாய்க்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இரு சிறுமியரையும் மீட்ட போலீசார், அவர்களை தாயிடம் ஒப்படைத்தனர்.



மின் கேபிள் அறுந்து தீ விபத்து


மூவரசம்பட்டு: மூவரசம்பட்டு பிரதான சாலையில், சென்ற லாரி உரசியதில், கடையின் மின் இணைப்பு கேபிள் ஒன்று அறுந்து சாலை விழுந்து தீ பற்றி எரிய துவங்கியது. இதனால், அச்சாலையில் போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்த மின் வாரியத்தினர் உடனடியாக மின் வினியோகத்தை நிறுத்தினர். பின், இணைப்பு சரி செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



'ஹெராயின்' விற்ற மேற்கு வங்க நபர் கைது


பம்மல்: பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலைய எல்லையில், 'ஹெராயின்' விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி பம்மல், இரட்டை பிள்ளையார் கோவில் அருகே கண்காணித்த போது, வாலிபர் ஒருவர் ஹெராயின் போதை பொருளை விற்பனை செய்து விட்டு, கோவூரை அடுத்த பெரியபணிச்சேரியில் உள்ள தன் அறைக்குச் சென்றார். அங்கு சென்று பிடித்து விசாரித்ததில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கபீர், 28, என தெரிந்தது. அவர் அறையில் 60 கிராம் 'பிரவுன் சுகர்' இருந்தது. கபீரை கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர்.



மனைவி தற்கொலை: கணவர் கைது



செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த கோணிமேடு, ஈஸ்வரன் நகர், 21வது தெருவைச் சேர்ந்தவர் சையது ஜமால், 39; சுயதொழில் செய்கிறார். இவரது மனைவி அசினா பானு, 30. இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் சையது ஜமால், மனைவியை அடித்துள்ளார். மனமுடைந்த அசினா பானு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், சையது ஜமாலை செங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X