தொடர்கிறது மின் வெட்டு அடி மேல் அடி! தொழில் துறையினர் 'ஷாக்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

06 ஆக
2021
06:02
பதிவு செய்த நாள்
ஆக 06,2021 05:57

கோவை:கொரோனா ஊரடங்கு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என அடுக்கடுக்கான பாதிப்புகளை சந்தித்து வந்த தொழில் துறையினர், புதிதாக இப்போது அறிவிக்கப்படாத மின் வெட்டால் திணறி வருகின்றனர்.



தொழில் நகரான கோவையில், ஆட்டோமொபைல், கிரைண்டர், மோட்டார் பம்ப் செட் என பல்துறை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.கொரோனா முதல் அலை பரவல் பாதிப்புகளில் இருந்து மீளத்துவங்கிய சமயத்தில், இரண்டாவது அலை காரணமாக தொழில் துறையினர், மீண்டும் பாதிப்புகளை சந்தித்தனர்.இதற்கிடையே, இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மேலும் தலைவலியை அதிகரித்தது. வடமாநில தொழிலாளர்கள் கோவை திரும்பாததால், பணியாளர் பற்றாக்குறை வேறு.பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், ஆர்டர்கள் வந்தாலும், பணியாளர் இல்லாததால், ஆர்டர்களை முடிக்க முடியாத நிலை இருப்பதாக, தொழில்முனைவோர் புலம்புகின்றனர்.



அடுத்த இடியாக, கோவையில் மின் வெட்டு பிரச்னை தலைதுாக்கியுள்ளது, தொழில் துறையினருக்கு தலைவலி தருகிறது.பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட தேதிகளில் மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால், அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் உற்பத்தி தாமதம், நஷ்டம் உள்ளிட்ட சிரமங்களை சந்திப்பதாக, தற்போது தொழில் துறையினர் புலம்புகின்றனர்.



தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர்(டேக்ட்) ஜேம்ஸ் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், கடந்த, 15 நாட்களாக ஒவ்வொரு நாளும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், 5 முதல் 10 முறை வரை, 10 நிமிடம் துவங்கி ஒரு மணி நேரம் வரை, மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.



இதனால், குறு, சிறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் திடீரென நிற்பதால், இயந்திர பாகங்கள் சேதமடைகின்றன; கடுமையான பொருள் நஷ்டத்தையும் சந்திக்கிறோம்.ஏற்கெனவே மாதம் ஒரு முறை, மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. தற்போது, தினமும் ஏற்படும் மின் நிறுத்தத்தால், தொழில் முனைவோர் பாதிக்கப்படுகின்றனர். தடை இல்லாத மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, மின்வாரிய தலைமை பொறியாளரிடம் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
07-ஆக-202112:00:05 IST Report Abuse
Ramaraj P நல்லது..
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
06-ஆக-202123:22:47 IST Report Abuse
Mohan மணு கொடுத்துட்டீங்கல்ல, நூறு நாள்ல நடவடிக்கை எடுத்துருவோம்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
06-ஆக-202123:17:44 IST Report Abuse
Mohan நடவடிக்கை அணில் மேலா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X