சென்னை;டி.என்.பி.எல்.,தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. 'தகுதிச்சுற்று 2'ல் திண்டுக்கல் அணியை 8 விக்கெட்டில் வீழ்த்தியது.தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகின்றன. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருச்சி அணி, ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியது.நேற்று தகுதிச்சுற்று 2 நடந்தது. இதில் தகுதிச்சுற்று 1ல் தோல்வியடைந்த சென்னை, 'எலிமினேட்டர்' போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் கவுஷிக் காந்தி, பீல்டிங் தேர்வு செய்தார்.சாய் அபாரம்திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த், விமல் குமார் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை சித்தார்த் வீசினார். இதில் 'பிரீ ஹிட்' ஆக கிடைத்த 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் விமல் குமார். சோனு யாதவ் வீசிய இரண்டாவது ஓவரிலும் மிரட்டிய விமல் குமார், இரு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார்.அடுத்து சாய் கிஷோர் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் விமல் குமார் (11)வெளியேறினார். கடைசி பந்தில் மணிபாரதி 'டக்' அவுட்டானார். சீனிவாசன்(3), விவேக் (7) விரைவில்கிளம்பினார். ஹரி நிஷாந்த் 56 ரன் எடுத்தார்.திண்டுக்கல் அணி20ஓவரில் 103 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.சென்னை சார்பில் சாய் கிஷோர் 3, அருண் 1 விக்கெட் சாய்த்தனர்.எளிய வெற்றிஎளிய இலக்கைத் துரத்திய சென்னை அணியின் ஜெகதீசன் 21 ரன் எடுத்தார். கவுஷிக் காந்தி (53) அரைசதம் அடித்தார். சென்னை அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை, பைனலுக்குள் நுழைந்தது. ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் சாய் கிஷோர் வென்றார்.நாளை நடக்கும் பைனலில் திருச்சி, சென்னை அணிகள் மோதுகின்றன.