காஞ்சி அத்தி வரதர் அவமதிப்பு; நான் தி.க.,காரன் அப்படித்தான் வைப்பேன் என சவடால்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 செப்
2021
08:01
பதிவு செய்த நாள்
செப் 03,2021 07:58

காஞ்சிபுரம்: சுவாமி படத்திற்கு செருப்பு வைத்த கடைக்காரர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வெளியில், ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, கோவில் அருகில் சுவாமி அர்ச்சனைக்காக தேங்காய் கடை வைத்திருக்கும் பூபதி, 55, என்பவர், கடை வெளியில் ஒரு கட்டையில் செருப்பு மாட்டி, அதில் காஞ்சி அத்தி வரதர் புகைப்படத்தை வைத்திருந்தார். இதைப் பார்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைக்காரரிடம், 'செருப்பில் சுவாமி படத்தை ஏன் வைத்துள்ளீர்கள்' எனக் கேட்டனர். அதற்கு அவர், 'என் கடை. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் தி.க.,காரன்' எனக் கூறியுள்ளார்.

இரு தரப்புக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடையை அடித்து நொறுக்கினர்.பாதுகாப்பிற்கு வந்த போலீசார், சண்டையை தடுத்து நிறுத்தி, கடை உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து ஹிந்து முன்னணியினர் கூறியதாவது: விநாயகர் கோவில் அருகில் தேங்காய் கடை வியாபாரம் செய்து வரும் இடம் நகராட்சிக்கு சொந்தமானது. அந்த இடத்தை ஆக்கிரமித்து, அவர் கடை வைத்துள்ளார். அவரது செயல், ஹிந்து மக்கள் அனைவரையும் புண்பட செய்துள்ளது. அந்த கடையை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியிடம் புகார் மனு கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு முன், தி.க.,வைச் சேர்ந்த சிலர் தேங்காய் கடைக்கு சென்றதாகவும், அவர்களின் துாண்டுதலால் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
04-செப்-202105:57:50 IST Report Abuse
Bharathi வாடிகன் கும்பலிடமிருந்து வாங்குற ரொட்டி துண்டுக்கு நல்லாவே வேலை பார்க்கறீங்க. பேசாம கட்சி பெற இந்து விரோத கட்சின்னு மாத்திடுங்களே.
Rate this:
Cancel
Sri - Delhi,இந்தியா
03-செப்-202119:06:34 IST Report Abuse
Sri தி க காரன் என்று கூறிக்கொள்ளும் நபர் தன பிழைப்புக்கே கோவில் வாசலை தான் நாடியுள்ளார். கடவுள் இருக்கான் குமாரு.... வேண்டுமானால் கீ வீ வீடு வாசலில் அந்த கடையை போட்டுக்கொள்ளட்டும்.
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
03-செப்-202118:12:22 IST Report Abuse
mrsethuraman  உன் கஞ்சிக்கே நீ காஞ்சி வரதரை நம்பி தான் பொழைப்பு நடுத்துறே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X