'மெகா' முகாமில் சென்னை மாநகராட்சி சாதனை! ஒரே நாளில் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி- | சென்னை செய்திகள் | Dinamalar
'மெகா' முகாமில் சென்னை மாநகராட்சி சாதனை! ஒரே நாளில் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி-
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 செப்
2021
01:09


சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த, 'மெகா' தடுப்பூசி முகாமில், ஒரே நாளில் 1.91 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி, மாநில அளவில், சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்தது.இதன் வாயிலாக, சென்னையில், இதுவரை 50 சதவீதம் பேர் ஒரு தவணை, 25 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எஞ்சியவர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.சென்னை மாநகராட்சியில், 58 லட்சத்து, 10 ஆயிரத்து, 713 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னைவாசிகளுக்கு மட்டுமின்றி, சென்னையில் வசிக்கும், வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.கல்லுாரி மாணவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் வாயிலாக, அந்தந்த கல்லுாரிகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது....இதைதவிர, தனியார் நிறுவனங்கள், குடிசைவாழ் பகுதிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்படுகிறது.சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளிலும், தலா ஒரு தடுப்பூசி மையம் அமைத்து, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துகிறது. இதை தவிர, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும், தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 11ம் தேதி வரை, 43 லட்சத்து, 55 ஆயிரத்து, 568 தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன.இந்நிலையில், தமிழகம் முழுதும், மாபெரும் தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 40 ஆயிரம் மையங்களில், 28 லட்சத்து, 91 ஆயிரத்து, 21 தடுப்பூசிகள் போடப்பட்டன.இந்த முகாமில், மற்ற மாவட்டங்களை விட, சென்னை அதிகளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளது.சென்னை மாநகராட்சியில், 1,600 மையங்களில், 1 லட்சத்து, 91 ஆயிரத்து, 350 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.அதிகபட்சமாக, 18 வயது முதல், 44 வயது வரையிலான, 1 லட்சத்து, 19 ஆயிரத்து, 612 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட, 71 ஆயிரத்து, 738 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதில், 98 ஆயிரத்து, 227 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 93 ஆயிரத்து, 123 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.நேற்று முன்தினம் வரை, 45 லட்சத்து, 85 ஆயிரத்து, 433 தடுப்பூசிகள் சென்னையில் போடப்பட்டுள்ளன. இதில், 30 லட்சத்து, 91 ஆயிரத்து, 13 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 14 லட்சத்து, 94 ஆயிரத்து, 420 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.மொத்த இலக்கில், 50 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 25 சதவீதம் பேருக்கு இரண்டு தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையை பொருத்தவரை, வாக்காளர் அடையாள அட்டையில் இடம் பெற்றவர்களை மட்டுமே, சென்னைவாசிகளாக கருத முடியாது.அதன் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட கணக்கு இருந்தாலும், லட்சக்கணக்கான, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.அதேபோல், எந்த மண்டலத்தில் உள்ள மக்கள் அதிகளவு தடுப்பூசி போட்டுள்ளனர் எனவும், துல்லியமாக பிரிக்க முடியாது. ஒரு மண்டலத்தை சேர்ந்தவர், வீட்டு அருகாமையில் உள்ள மற்றொரு மண்டலத்தில் தடுப்பூசி செலுத்தியிருக்க கூடும். தொற்று அறிகுறிகள் உள்ள பகுதிகளில், தடுப்பூசி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். சென்னையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். மெகா முகாம்கள் அடிக்கடி நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.விபரம் அறியலாம்!தடுப்பூசி மையங்கள் குறித்த விபரங்களை, http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.தடுப்பூசிக்கு, gccvaccine.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். தடுப்பூசி முகாம்கள், நாள்தோறும் காலை, 8:30 மணி முதல், 4:00 மணி வரை நடைபெறும்.பல்லாவரம், பம்மல் படுமந்தம்!சென்னையை போன்று, ஆவடி மாநகராட்சி, புறநகர் நகராட்சிகளிலும், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்துள்ளது. இதில், தாம்பரம், செம்பாக்கம், அனகாபுத்துார் நகராட்சிகள், தடுப்பூசி அதிகளவில் செலுத்தி உள்ள நிலையில், பல்லாவரம், பம்மல் நகராட்சிகள் மந்தமாக செயல்பட்டு வருகின்றன.இது குறித்த விபரம்:ஆவடி மாநகராட்சி18 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 2,10,000இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் - 3,64,000சிறப்பு முகாமில் போட்டவர்கள் - 12,538இன்னும் போட வேண்டியவர்கள் - 1,54,000தாம்பரம் நகராட்சி18 வயதுக்கு மேற்பட்டவர்கள்- - 1,18,499இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் - 73,000சிறப்பு முகாமில் போட்டவர்கள் - 4,049இன்னும் போட வேண்டியவர்கள் - 41,450பல்லாவரம் நகராட்சி18 வயதுக்கு மேற்பட்டவர்கள்- - 1,48,368இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் - 46,836சிறப்பு முகாமில் போட்டவர்கள் - 2,935இன்னும் போட வேண்டியவர்கள் - 98,597செம்பாக்கம் நகராட்சி18 வயதுக்கு மேற்பட்டவர்கள்- - 37,000இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் - 24,000சிறப்பு முகாமில் போட்டவர்கள் - 1,700போட வேண்டியவர்கள் - 11,300பம்மல் நகராட்சி18 வயதுக்கு மேற்பட்டவர்கள்- - 61,000இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் - 14,000சிறப்பு முகாமில் போட்டவர்கள் - 2,247போட வேண்டியவர்கள் - 44,743அனகாபுத்துார் நகராட்சி18 வயதுக்கு மேற்பட்டவர்கள்- - 23,107இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் - 15,267சிறப்பு முகாமில் போட்டவர்கள் - 84-0இன்னும் போட வேண்டியவர்கள் - 7,000பூந்தமல்லி நகராட்சி18 வயதுக்கு மேற்பட்டவர்கள்- - 45,000இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் - 25,000சிறப்பு முகாமில் போட்டவர்கள் - 4,500இன்னும் போட வேண்டியவர்கள் - 15,500

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X