குழாய் உடைப்பை தடுக்க ஏர்வால்வு அமைக்கப்படுமா | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
குழாய் உடைப்பை தடுக்க ஏர்வால்வு அமைக்கப்படுமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 செப்
2021
23:35

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சாலைத்தெரு வழியாக, சங்கர மடம் நீர்த்தேக்க குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.



இதனால் இந்த பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:குழாய் உடைப்பை அவ்வப்போது நகராட்சி ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர். எனினும் மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது.நிரந்தரமாக சரிசெய்ய, குழாயில் 'ஏர்வால்வு' பொருத்தினால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். செலவு அதிகமாகும் என்பதால், நகராட்சி ஊழியர்கள் மலைக்கின்றனர். அடிக்கடி ஏற்படும் பழுதை சரிசெய்வதற்கு பதிலாக, ஏர்வால்வு அமைக்க ஒருமுறை செலவு செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X