குடியிருப்போர் குரல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:11

ராமநாதபுரம் : ராமநாதபுரம் தினமலர் நகரில் பாதாள சாக்கடை பிரச்னை தீராத துயரமாக இருப்பதால் நகராட்சி நிர்வாகம் முழுமையாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என தினமலர் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் தெரிவித்தனர்.



சங்க செயலாளர் விஜயராஜன், கோபாலகிருஷ்ணன், மாடசாமி, ஆரோக்கியமேரி, விஜயராஜ், பன்னீர்செல்வம், மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:தினமலர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 2008 ஜூன் முதல் செயல்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் பெரும்பாலும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள்,டாக்டர்கள், வர்த்தக பிரமுகர்கள்.தீராத பாதாளசாக்கடை துயரம்பாதாள சாக்கடை இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் இங்கு உள்ள தெருக்களில் அவ்வப்போது ஆறாக ஓடுகிறது. குறிப்பாக தினமலர் நாளிதழ் அலுவலகத்தை ஒட்டிய பகுதி சாலையில் அடிக்கடிஇந்த அவல நிலை தொடர்கிறது.



துர்நாற்றம் தாங்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். நோய் பரவும் அபாயமும் உள்ளது.நகராட்சியில் முறையிட்டால் அடைப்பை சரி செய்து கழிவு நீரை டேங்கர் லாரி மூலம் உறிஞ்சுகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.நகரில் பல தெருக்களில் இதுபோல் பாதாளசாக்கடை நீர் மேன்ஹோல் வழியாக வெளியேறுவதால் அவதிப்படுகிறோம்.பாதாள சாக்கடைமூடிகளை சரியாக மூடாததால் மழைக்காலங்களில் அடிக்கடி மழை நீருடன் சாக்கடை நீரும் தெருவில் பாய்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.தாழ்வான மின்கம்பிகளால் ஆபத்துதினமலர் நகர் 3-வது குறுக்குத்தெருவில் ஒரு மின் கம்பத்தில் இருந்து மற்றொரு மின் கம்பத்திற்கு இணைக்கப்பட்டுஉள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது.இந்த தெருவில் குடும்பத்தினருக்கு விபத்து அபாயம் உள்ளது. உயரமான வாகனங்கள் சென்றால் மின் கம்பிகள்உரசி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.



மின்கம்பிகள் தாழ்வாகசெல்வதை தடுக்க கூடுதலாக ஒரு மின் கம்பம் நடுப்பகுதியில் அமைத்து கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும்குடிநீர் கிடைக்கவில்லைகுடியிருப்பு பகுதிகளில் அனைவரும் முறையாக நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். ஆனால் காவிரி குடிநீர் முறையாக வினியோகிப்பதில்லை. டேங்கர் லாரி குடிநீரை குடம் ரூ.12க்கு வாங்கி குடிக்கிறோம்.அதே போல் இப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் புழக்கத்திற்கு தேவையான நீரையும் விலை கொடுத்து வாங்கும் நிலைதான் உள்ளது.



நகராட்சி நிர்வாகம் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் குழாய்களை சீரமைக்க தோண்டும் பள்ளங்களை மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.குடிமகன்கள் தொல்லைநகரின் பல தெருக்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் இதில் அலட்சியம் காட்டுகிறது. மேலும், குடியிருப்பை ஒட்டிய மறைவான பகுதிகளில் தெருவிளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளதால் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.



போலீசார் நகர் பகுதியில்தினசரி இரவு நேரங்களில் ரோந்து செல்ல எஸ்.பி., கார்த்திக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்துசிக்னல் தேவைதினமலர் நகர் நுழைவுப்பகுதியில் சென்டர் மீடியனை கடந்து சாலையை கடக்கும் நிலையில் இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, நுழைவு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும், என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X