மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி ஜோர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:14

அண்ணா நகர் மண்டலத்தில், மக்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரிக்கும் பணி ஜோராக நடக்கிறது.



சென்னை மாநகராட்சி, அண்ணா நகர் மண்டலத்தில், 94 முதல் 108 வரை, 15 வார்டுகள் உள்ளன. இந்த மண்டலத்தில், 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தினமும், 38 டன் குப்பை சேகரமாகிறது. இதை பல்வேறு உரக்கிடங்கில் இயற்கை உரமாக தயாரிக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.



இது குறித்து, உரக்கிடங்கு மேற்பார்வையாளர் அன்புக்கரசன் கூறியதாவது:அண்ணா நகர் மண்டலத்தில் தினமும் சேகரமாகும் 38 டன் மக்கும் குப்பை, அந்தந்த வார்டுகளில் உள்ள 24 உரக்கிடங்குகளுக்கு கொண்டு வரப்படுகிறது.இங்கு, மக்கும் குப்பையான காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள் ஆகியவற்றை ஒன்றாக கலக்கி, 15 நாட்கள் ஊற வைத்து, தொடர்ந்து, 45 நாட்கள் கழித்து மக்கும் குப்பையாக இருந்த கழிவுகள் மண்ணாக மாறி உரமாகி விடுகிறது. தினமும் கிடைக்கும் குப்பைகள், டன் அளவில், 10 சதவீதம் உரமாக கிடைக்கும்.



குறிப்பாக, 108, 102 மற்றும் 103 ஆகிய வார்டுகளில், எம்.எம்.டி.ஏ., மார்க்கெட், அரும்பாக்கம் மார்க்கெட், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகளில் அதிகப்படியான காய்கறி மற்றும் பழக்கழிவு கிடைக்கிறது. இதை அந்தந்த வார்டுகளில் ஒன்றாக கலக்கி, அரும்பாக்கம் சுடுகாட்டில் உள்ள பெரிய உரக்கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. இதை காய வைத்து உரமாக்கி மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கிறோம். அதே நேரத்தில், மாநகராட்சியின் 'மியாவாக்கி' காடுகள், சாலைகளில் வளர்க்கப்படும் மரங்களுக்கும், உரம் அனுப்பி வைக்கப்படுகிறது.



வீட்டு பூச்செடி மற்றும் காய்கறி செடிகள் வளர்ப்போருக்கும், இயற்கை உரம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தவிர்த்து, பெரிய அளவிலான பழக்கடைகளில் கிடைக்கும் கழிவுகள், 'பயோ காஸ்' தயாரிக்கும் கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த மூன்று மாதங்களில் அண்ணா மண்டலத்தில் கிடைத்த குப்பைகள் விபரம்:மாதம் - குப்பை டன்னில்ஜூன் - 630ஜூலை - 816ஆகஸ்ட் - 850



விழிப்புணர்வு இல்லை!




சென்னை மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும், பொதுமக்கள் குப்பையை முறையாக பிரித்து கொடுப்பது இல்லை. இதனால், மக்கும் குப்பை, மக்காத குப்பையுடன் கலந்து வீணாகிறது. இதுகுறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X