மினி பஸ்கள் அசுர வேகம்: விபத்துகளுக்கு அச்சாரம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:15

திருப்பூர்:பலவஞ்சிபாளையத்தைச் சேர்ந்தவர் தீபா, 32. இவரது மகள்தக் ஷனா, நான்கரை வயது. தாயும், மகளும் வீட்டில் இருந்து கிளம்பி, இருசக்கர வாகனத்தில், பல்லடம் ரோடு, பூம்புகார் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.கலெக்டர் அலுவலகம் முன்புறம் உள்ள வேகத்தடையை கடந்து இடதுபுற ஓரமாக சென்று கொண்டிருந்த தீபா ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த காரால், வலதுபுறம் நோக்கி முன்னேறியுள்ளார்.



குன்னாங்கல்பாளையத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த மினி பஸ்சில், பின்பக்க சக்கரத்தில் தீபா ஓட்டி வந்த வாகனம் சிக்கியது. பின்புறம் அமர்ந்திருந்த குழந்தை தக் ஷனாவின் தலையில் சக்கரம் ஏறி பரிதாபமாக பலியானார். தெற்கு போலீசார் விசாரித்தனர்.விபத்து நடந்த இடத்துக்கு 'சிசிடிவி' கேமராக்கள் இல்லை.பொதுமக்கள், 'பல்லடம் ரோட்டில் மினிபஸ்கள் வேகமாக செல்கிறது.


நெரிசல், முன்புறம் வாகனம் சென்று கொண்டிருப்பதை உணராமல் 'ஏர்ஹாரன்'களை ஒலிக்க செய்து நிலை குலைய செய்கின்றனர்.போலீசார், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை,' என குற்றம் சாட்டுகின்றனர்.திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., வெங்கட்ரமணிகூறுகையில், ''பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X