கிராமங்களில் அடிப்படை வசதி கிளை மாநாட்டில் வலியுறுத்தல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கிராமங்களில் அடிப்படை வசதி கிளை மாநாட்டில் வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:16

அவிநாசி:மா.கம்யூ., கட்சியின் வடுகபாளையம் ஊராட்சி கிளைகளான வடுகபாளையம் மாதர் காட்டுவளவு மற்றும் காட்டுவளவு மாதர் கிளைகளின் மாநாடு நடைபெற்றது.மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பழனிசாமி, தேவி முன்னிலை வகித்தனர். ஊராட்சி முழுக்க, நல்ல தண்ணீரை முறையாக வினியோகிக்க வேண்டும்.வடுகபாளையம் ஏ.டி.,காலனியில் உள்ள பழுதடைந்த பொது கழிப்பிடத்தை புதுப்பிக்க வேண்டும்.


காட்டுவளவு தெருக்களுக்கு, கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். ராயகவுண்டன்புதுாரில் புதிய மேல்நிலை தொட்டி, அண்ணமார் கோவில் - ராயகவுண்டன்புதுார் சுடுகாடு வரை, தெருவிளக்கு வசதி, வடுகபாளையம் ஆலமரம் - பிச்சாண்டம்பாளையம் வரையுள்ள பழுதடைந்த தார் சாலையை புதுப்பிக்க வேண்டும்.பிச்சாண்டம்பாளையம் ஏ.டி., காலனி பொதுகழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பெரிய ஓலப்பாளையத்தில் உள்ள மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்து, ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X