மருத்துவ கல்லூரி வளாகத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்' தாறுமாறு: ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மருத்துவ கல்லூரி வளாகத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்' தாறுமாறு: ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:35

திருப்பூர்:யார் வருகிறார்கள், செல்கிறார்கள் என்ற கண்காணிப்பு இல்லாததால், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டூவீலர், கார்கள் நிறுத்தும் ஸ்டாண்டாக மாறி வருகிறது.திருப்பூர், தாராபுரம் ரோட்டிலுள்ள தலைமை அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லுாரியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தனியார் நிறுவன வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 20 பேரை பாதுகாவலர்களாக நிறுவனம் நியமித்துள்ளது.



மருத்துவமனைக்கு வரும் டூவீலர், கார்களை ஒழுங்குபடுத்துவது, ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுப்பது இவர்களது பணி. மருத்துவ பணிகளில் காலிபணியிடங்கள் நிறைய இருப்பதால், இப்பணிக்கு வந்தவர்களை வார்டுக்கு பயன்படுத்துகின்றனர்.வெளி வளாகத்தை கண்காணிக்க யாருமில்லை. இதனால், முன்புறம் நுழைவு வாயில், ரத்த வங்கி, அம்மா உணவகம், தடுப்பூசி போடும் மையம் உள்ளிட்ட இடங்களில் தாறுமாறாக டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது.



டீன் அறை முதல் மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவு, காப்பீடு திட்ட வார்டு உள்ள பகுதியில் வழிநெடுகிலும் கார்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல இடமில்லை. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கூறுகையில், 'கட்டுமான பணி நடப்பதால், அறுவை சிகிச்சை பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எப்போதும் அவசர கதியில் ஆம்புலன்ஸ்கள் நுழைகிறது.டூவீலர்கள், கார்கள் சகட்டுமேனிக்கு நிறுத்துவதால், இடையூறாக ஏற்படுகிறது. டூவீலர், கார் நிறுத்த தனியிடம் ஒதுக்கி, ஒழுங்குபடுத்த வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X