ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அறிவுசார் மையம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:43

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய நுாலகம், அறிவுசார் மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



ஆனால் அதற்குரிய இடத்தை தேர்வு செய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் மாவட்ட நுாலகம் அமைந்துள்ளது. இதன்கீழ் பரமக்குடி, ராமேஸ்வரம் உட்பட மாவட்டத்தில்மைய நுாலகம், கிளை என மொத்தம் 88 நுாலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.ராமநாதபுரம் நகராட்சிபகுதியில் சின்னக்கடை வீதியில் கிளைநுாலகம் பெயரளவில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. 2000 சதுரஅடி இடத்தில் அலுவலக கட்டடம், புத்தகங்கள் வைப்பு அறை, இருக்கை வசதிகளுடன் கூடிய படிப்பகம் அமைக்கப்பட உள்ளது. அந்த அளவிற்கு நகரில் இடமில்லை எனக்கூறி இத்திட்டம் செயல்படுத்த தாமதம் செய்வதாவும், இதன்காரணமாக நிதி திருப்பி செல்ல வாய்ப்புஉள்ளதாக புகார் எழுந்துள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை வளாகம் அல்லது பராமரிப்பு இல்லாமல் பாழாகும் பூங்கா உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யலாம். நகர மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் நுாலகம், அறிவுசார் மையத்திற்கான இடத்தை தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி கமிஷனர்(பொ) நீலேஸ்வரர் கூறுகையில், 'ரூ.2 கோடி செலவில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இதனை செயல்படுத்த இடத்தை தேர்வு செய்யும் பணி மும்மரமாக நடைபெறுகிறது,'என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X