நொய்யல் ஆறு அருகே மருத்துவ கழிவுகள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
நொய்யல் ஆறு அருகே மருத்துவ கழிவுகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:52

கோவை:புட்டுவிக்கி பாலம் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில், மர்ம நபர்கள் சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையில், ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில், புட்டுவிக்கி பாலம் அருகே செல்லும் நொய்யல் ஆற்றில், சிலர், காலாவதியான மருந்துகள், ஊசிகள், மருந்து பாட்டில்கள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட பஞ்சு போன்ற மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர்.இது, மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X