சரவணம்பட்டி ஓட்டல்களுக்கு வெரிகுட்! கிடைத்தது 'சுத்தமான நடைபாதை உணவு' சான்றிதழ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:57

கோவை:நடைபாதை உணவகங்களுக்கான, சுத்தமான நடைபாதை உணவு மையம் தரச்சான்றிதழ், சரவணம்பட்டி நடைபாதை உணவு வணிகர், சிறு, குறு உணவு வணிகர்களுக்கு வழங்கப்பட்டது. என்னதான் ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டாலும், கையேந்தி பவன்கள், நடைபாதை உணவகங்களில் இருக்கும் சுவையே தனிதான். நம்மில் பலரும் இதை உணர்ந்து இருப்போம். இந்த உணவகங்களில் சுவை இருந்தாலும், அங்கு முகம் சுழிக்க வைப்பவை சுத்தம், சுகாதாரம். இதை நிவர்த்தி செய்து, அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் முயற்சியை, கோவை மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை மேற்கொண்டது.துவக்கத்தில் இதற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால், கொரோனா காரணமாக தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. திட்டத்தின் படி, உள்ளூரில் உணவுக்கூடங்கள் அனைத்தும் பகுதிவாரியாக ஒருங்கிணைக்கப்பட்டன.அந்த பகுதிக்கு, 'சுத்தமான நடைபாதை உணவு மையம்(கிளீன் ஸ்ட்ரீட் புட் ஹப்)' என பெயரிடப்பட்டது. அந்த பகுதியிலுள்ள உணவகங்கள் சுகாதாரம், உணவுப்பாதுகாப்பு வசதிகளுடன் தரமான, பாதுகாப்பான உணவு வழங்க வேண்டும்.இதன்படி, கோவை சரவணம்பட்டி பகுதி தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் உள்ள உணவகங்களை, மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.இதன் பின்னர், உணவுப்பாதுகாப்பு மற்றும் தரம் ஆணைய குழு தணிக்கை மேற்கொண்டது. இரு கட்ட தணிக்கையில், 40 கடைகள் இடம்பெற்றன. முடிவில், சரவணம்பட்டியில் உள்ள நடைபாதை உணவகங்களுக்கு சுத்தமான நடைபாதை உணவு மையம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் சமீரன் கூறுகையில், ''துவக்கத்தில், 112 கடைகள் அடையாளம் காணப்பட்டன. கொரோனாவால், பல கடைகள் மூடப்பட்டு, இறுதி தணிக்கையில், 40 கடைகள் இடம்பெற்றன. தணிக்கையில் சுத்தமான தெரு, உணவு வழிகாட்டி ஆவணத்தின் படி உணவு தயாரித்தல், சமைத்தல், சேமித்தல், பரிமாறுதல், ஊழியர்கள் சுத்தம், நீரின் தரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சரவணம்பட்டி பகுதி சுத்தமான நடைபாதை உணவு மையம், 150 க்கு, 126 மதிப்பெண் பெற்றது. இதையடுத்து, சுத்தமான நடைபாதை உணவு மையம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது,'' என்றார். தரமாக சமைக்க பயிற்சி!மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''மாவட்டத்தில், உள்ள அனைத்து வகையான உணவகங்கள் சார்ந்த ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டல் ஒன்றுக்கு, 3 - 5 பேர் வரை பங்கேற்கின்றனர். பாதுகாப்பாக உணவு சமைத்தல், அவற்றை கையாளுவது, சமையலறையை சுகாதாரமாக பராமரிப்பது, பரிமாறுவது உள்ளிட்ட அனைத்து வகையான நடைமுறைகளும் கற்றுத்தரப்படுகிறது. மாவட்டத்தில், இதுவரை, 2,100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X