பவானி ஆற்றில் 5,600 கனஅடி உபரி நீர் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
01:12

பவானிசாகர்:பவானிசாகர் அணையில் இருந்து, ௫,௬௦௦ கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடியாகவும், நீர் இருப்பு, 30.3 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் நேற்று முன்தினம், 2,220 கன அடியாக இருந்த வரத்து, 5,830 கன அடியாக நேற்று காலை அதிகரித்தது. அக்டோபர் மாதம் வரை அணையில், 102 அடிக்கு மட்டுமே தண்ணீரை தேக்க முடியும் என்பதால், அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது.



நேற்று காலை நிலவரப்படி பவானி ஆற்றில், 5,600 கன அடி தண்ணீர் உபரி நீர் திறக்கப்பட்டது. தடுப்பணையில் வெள்ளம்பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணைக்குள் நுழைய, குளிக்க கடந்த, ௨ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 4,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வந்ததால், கொடிவேரி தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. அப்பகுதி பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X