விளைபொருட்களுக்கு விலை; விவசாயிகளுக்கு இருக்காது கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
01:16

கோவில்பாளையம்:'உழவர் சந்தையில் விற்பதன் வாயிலாக கூடுதல் விலை பெறலாம்' என பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 'சொட்டு நீர் பாசனம்' எனும் தலைப்பில் உள் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் துணை இயக்குனர் சபி அகமது பேசுகையில், ''சொட்டுநீர்ப் பாசனத்தால், 60 சதவீதம் வரை நீர் மீதமாகும். களை உருவாகாது. திரவ உரங்களை, சொட்டு நீர் குழாய்கள் வாயிலாக பயிர்களுக்கு வழங்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது,'' என்றார்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் நடராஜன், சொட்டுநீர் குழாய் பராமரிப்பு மற்றும் அடைப்புகளை நீக்குதல் குறித்து கூறினார்.வேளாண் விற்பனை துறை அலுவலர்கள் பேசுகையில், 'விவசாயிகள் உழவர் சந்தைக்கு தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்வதன் வாயிலாக, கமிஷன் இல்லாமல் அதிக விலை பெறலாம். மேலும் விளை பொருட்களை இருப்பு வைப்பது, அதிக விலை கிடைக்கும் சந்தைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்' என்றனர்.சிறப்பு விருந்தினராக பயிற்சி கலெக்டர் சரண்யா பங்கேற்றார். விவசாயிகள், வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர்கள் சோமசுந்தரம், லட்சுமண பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X