பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் ஓரவஞ்சனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
01:27

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மக்கள் மற்றும் ரயில்வே ஆர்வலர்கள், பாலக்காடு ரயில்வே கோட்டத்தால் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவது பொறுக்க முடியாமல், தங்களை விடுவித்து, மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்கும்படி வலியுறுத்துவது தீவிரமடைந்துள்ளது.பொள்ளாச்சி ரயில்வே பகுதிகள், தெற்கு ரயில்வே கோட்டங்கள் பிரிக்கப்பட்ட போது, மதுரை கோட்டத்தில் இருந்தது. வளர்ச்சிப்பாதையில் இருந்த பொள்ளாச்சி ரயில்வே வரலாறு, கடந்த, 2007ல் மாறத்துவங்கியது.



கோட்டம் மாறியதுசேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டு, 2008 முதல் தனித்து செயல்பட துவங்கியது. இதற்காக, பாலக்காடு கோட்டத்தில் இருந்து வருவாய் அளிக்கும் பகுதிகள் சில, சேலம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.இதற்கு, பாலக்காடு கோட்ட நிர்வாகம் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகள், பாலக்காடு கோட்டத்துக்கு தாரை வார்க்கப்பட்டன.வளர்ச்சி முடக்கம்அன்று முதல், இன்று வரை பொள்ளாச்சி ரயில்வே வளர்ச்சி, திட்டமிட்டு முடக்கப்படுவதாக ரயில்வே ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


மீட்டர் கேஜ் காலத்தில், கேரளாவில் இருந்தும், கோவையில் இருந்தும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பல்வேறு ரயில்கள், இரவு நேர எக்ஸ்பிரஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.அகல ரயில் பாதை பணிகள் துவங்கப்பட்ட போது, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதன் பின், பணிகள் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்தும், பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கி வந்த ரயில்களை திரும்ப இயக்க, பாலக்காடு கோட்ட நிர்வாகம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.அக்கறை இல்லைஒரு காலத்தில் வருவாய் குறைவு எனக்கூறி மூடப்பட்ட, கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை, மீண்டும் திறப்பதன் வாயிலாக மக்களுக்கும், ரயில்வேவுக்கு கிடைக்கூடிய நன்மைகள் குறித்து ஆதாரங்களுடன் ஏராளமான கடிதங்கள், மனுக்கள் அனுப்பியும், அதை கோட்ட நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.கொரோனா காலத்துக்கு முன் இயங்கிய முக்கிய பயணியர் ரயில்களான கோவை - பொள்ளாச்சி; பாலக்காடு - திருச்செந்துார்; கோவை - மதுரை ரயில்கள், முதல் அலையின் போது ரத்து செய்யப்பட்டன.



இரண்டாண்டுகள் கடந்தும் இது வரை இயக்கப்படவில்லை.இப்படி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவது குறித்தும், அதற்கு தேவையான ரயில்கள் இயக்குவது குறித்தும் பாலக்காடு கோட்டம் எவ்வித அக்கறையும் காட்டாமல் உள்ளது.ரயில்கள் இயக்கணும்கொரோனாவுக்கு முன் இயங்கிய ரயில்களையாவது திரும்ப இயக்க வேண்டும், என, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு, பொள்ளாச்சி, கோவை, திண்டுக்கல் எம்.பி.,கள், ரயில்வே பயணிகள் நலச்சங்கங்கள், அரசியல் கட்சிகள் என பலரும் கடிதம் எழுதியும், நேரில் மனு கொடுத்தும் வலியுறுத்தினர்.ஆனால், இரண்டாண்டுகள் கடந்தும், அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதற்கு, பாலக்காடு கோட்ட அதிகாரிகளின் 'லாபி' தான் காரணம் என கூறப்படுகிறது.இதனால் விரக்தியடைந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மக்கள், பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் உள்ளிட்டோர், மக்களுக்கும் பயனின்றி, வளர்ச்சிக்கும் தடையாக உள்ள பாலக்காடு கோட்டத்தில் இருந்து, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை விடுவித்து, மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என தீவிரமாக வலியுறுத்த துவங்கியுள்ளனர்.மத்திய அமைச்சருக்கு அழுத்தம்!இது தொடர்பாக பல தரப்பினரும் தெரிவித்துள்ள அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.



எம்.பி.,யின் கடிதத்தில், தமிழக பகுதிகளை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி, ரயில்கள் இயங்க முட்டுக்கட்டை போடும் பாலக்காடு கோட்டத்தில் இருந்து, மீனாட்சிபுரம் - பொள்ளாச்சி - கிணத்துக்கடவு பகுதிகளை பிரித்து, மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.கடிதத்துடன், ரயில்வே ஆர்வலர்களின் புகார் மனுக்களையும் இணைத்து, இ-மெயில் வாயிலாக, இந்த கடிதத்தை மத்திய அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X