20 பவுன் நகை, பணம் கொள்ளை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
20 பவுன் நகை, பணம் கொள்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
01:38

கீழக்கரை : கீழக்கரை அருகே பெரியபாளையரேந்தலில் ஓட்டு வீட்டின் கூரையை பிரித்து உள்ளே இறங்கிய நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.



கீழக்கரை அருகேயுள்ள பெரிய பாளையரேந்தலை சேர்ந்தவர் கார்மேகம் 60. இவர் ஆட்டுக்கிடை அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் சென்றுஇருந்தனர். நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டை திறந்த போது ஓட்டு வீட்டின் கூரையை அகற்றி இருப்பது தெரியவந்துள்ளது. பீரோவில் இருந்த ரூ.2 லட்சம், 20 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.ஆட்டுக்கிடை விவசாயிகார்மேகம் கீழக்கரை போலீசில் புகார் அளித்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X