மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள் வார்டு உறுப்பினர் பதவிக்கு அக்.9ல் தேர்தல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள் வார்டு உறுப்பினர் பதவிக்கு அக்.9ல் தேர்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
01:40

ராமநாதபுரம் : மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஆறு ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 33 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 40 இடங்களுக்கு வரும் அக்.,9ல் தேர்தல் நடைபெற உள்ளது.



ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 429 ஊராட்சிகள் உள்ளன. 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் பரமக்குடி போகலுார் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் (எஸ்.சி., பொது) பதவிக்கும், கடலாடி ஒன்றியத்தில் எம்.கரிசல்குளம் (பொது), ராமநாதபுரம் ஒன்றியத்தில் சக்கரக்கோட்டை (எஸ்.சி., பெண்), திருப்புல்லாணி ஒன்றியத்தில் கொம்பூதி (எஸ்.சி.,பொது), ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் ஏ.ஆர்.மங்கலம் (எஸ்.சி.,பொது), திருவாடானை ஒன்றியத்தில் பழங்குளம் (பொது), முதுகுளத்துார் ஒன்றியத்தில் மகிண்டி (எஸ்.சி.,பொது) ஆகிய ஆறு ஊராட்சிகளில் தலைவர் பதவி காலியாக உள்ளது.



இதுபோக ஒன்றியம் வாரியாக ராமநாதபுரம்--2, மண்டபம்--1, திருப்புல்லாணி--2, ஆர்.எஸ்.மங்கலம்--4, திருவாடானை--2, போகலுார்--2, பரமக்குடி--5, நயினார்கோவில்--2, முதுகுளத்துார் -6, கமுதி--5, கடலாடி--2 என மொத்தம் 33 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. போகலுாரில் - 24, பரமக்குடியில் 8 ஊராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி தலைவர், 33 வார்டு உறுப்பினர் போட்டியிடும் பகுதிகளில் தேர்தல்நடத்தை விதிகள்அமலில் உள்ளன. இன்று செப்.,15 முதல் செப்.,22 வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம்.



செப்.,23ல் ஆய்வு செய்யப்படும், செப்.,25ல் திரும்ப பெறலாம், அக்., 9 ல் ஓட்டுப்பதிவு காலை 7:00மணி முதல் மாலை 6:00 மணிவரை நடைபெறும். அக்., 12ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X