இரு தொகுதிகளில் ஓட்டுச்சாவடிகள் பிரிப்பு இல்லை: அரசியல் கட்சியினருக்கான கூட்டத்தில் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
01:56

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிக்கான வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் குறித்து, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், அரசியல் கட்சியினருடன், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்தார். சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகைவேல் முன்னிலை வகித்தார்.தாசில்தார்கள் அரசகுமார், விஜயகுமார், சசிரேகா பேசினர். தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். அரசியல் கட்சியினருக்கு வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்கள் வழங்கப்பட்டன.அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி தொகுதியில், நகரத்தில் -- 88, கிணத்துக்கடவு - 74, பொள்ளாச்சி தாலுகாவில் - 107, என, மொத்தம், 269 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகள், 132 மையங்களில் உள்ளன.இங்கு, ஒரு லட்சத்து, 08 ஆயிரத்து, 852 ஆண்கள், ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 159 பெண்கள், திருநங்கைகள், 38, மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும், 44 பேர் என மொத்தம், 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 093 பேர் உள்ளனர்.ஓட்டுச்சாவடி மையங்கள் பிரிப்பு, சேர்க்கை குறித்து விளக்கப்பட்டது. அதில் கடந்த சட்டசபை தேர்தலில் துணை ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு இருந்தன. அதில், கமலமுத்து நகர் மையம், பி.கே.டி., பள்ளிக்கும், சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மையத்தில் இருந்து, இரு ஓட்டுச்சாவடிகள், மாரியம்மாள் பள்ளிக்கும் மாற்றப்பட்டன. அதற்கு, அரசியல் கட்சியினர் பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும், புது இடம் வேண்டாம் என கருத்து தெரிவித்தனர்.தொகுதியில், 1,500க்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கும் திட்டம், மற்ற பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சியில், 1,400 - 1,450க்குள் மூன்று ஓட்டுச்சாவடிகள் உள்ளன.வால்பாறைவால்பாறை தொகுதியில், 124 இடங்களில், 235 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், ஆண்கள், 98,644; பெண்கள், ஒரு லட்சத்து, 06 ஆயிரத்து, 811; திருநங்கைகள், 20, மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், 50 பேர், என, மொத்தம், 2,05,525 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த தேர்தலில், சமவெளிப்பகுதியில் நான்கு; மலைப்பகுதியில் ஒன்று என, மொத்தம், ஐந்து ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டன. பழைய இடத்துக்கு கொண்டு செல்ல அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர். அதில், மானாம்பள்ளியில், ஓட்டுச்சாவடி பள்ளி வளாகம் சேதமாக உள்ளதால், வனத்துறைக்கு சொந்தமான சவமலை மஸ்துார் அலுவலகத்தில் தொடர்ந்து செயல்படும்.கட்டடம் பழுதான, 12 ஓட்டுச்சாவடிகள், அதே மையத்தில் நல்ல நிலையில் உள்ள கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அரசியல் கட்சியினர் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன.பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் பிரிக்கும் வகையில் இல்லை. வரைவு ஓட்டுச்சாவடிகள் குறித்த கருத்துகள், வரும், 25ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X