பளியன்குடியில் இடியும் நிலையில் வீடுகள் | தேனி செய்திகள் | Dinamalar
பளியன்குடியில் இடியும் நிலையில் வீடுகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
02:36

கூடலுார் : லோயர்கேம்ப் வனப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் வீடுகள் இடியும் நிலையில் உள்ளது.லோயர்கேம்ப் வனப்பகுதியில் உள்ள பளியன்குடியில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 47 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.



இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. இதில் பல வீடுகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. ஒரு சில வீடுகளில் கூரை மற்றும் சுவர்கள் இடிந்துள்ளதால் வசிக்க முடியாத நிலையில் உள்ளது. இதை சீரமைக்க கோரி அரசுக்கு பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை சீரமைக்காததால் மழை காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது மேலும் சில வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்பு சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என பழங்குடியின மக்கள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X