இழுத்தடிக்கப்படும் இழப்பீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
03:40

மதுரை : பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2013ல் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் தலா 15 அடிக்கு சர்வீஸ் ரோடு அமைக்க முடிவு செய்து, அப்பகுதி கட்டடங்களை இடித்துவிட்டு, இழப்பீடு வழங்கவும் அரசு முடிவு செய்தது.



மேம்பாலம் கட்ட அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து இழப்பீடு வழங்கப்படாத நிலையிலும் வடக்கு பகுதி குடியிருப்புக்களை அகற்றிக் கொண்டனர். சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்கின்றன. அதேசமயம் இழப்பீடு தொகை பிரச்னையால் பாலத்தின் தென்பகுதியில் சிலர் குடியிருப்புக்களை அகற்றவில்லை.



இதனால் 9 ஆண்டுகளாக சர்வீஸ் ரோடு பணிகள் துவக்கப்படவே இல்லை. ஒற்றையடி பாதையாக மாறிவிட்டது. அனைத்து வாகனங்களும் வட பகுதியில் சர்வீஸ் ரோட்டில்தான் சென்று திரும்புகின்றன. குறுகலாக இருப்பால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிலையூர், கைத்தறிநகர், சம்பக்குளம் செல்லும் அரசு டவுன் பஸ் பெரியரத வீதி வழியாக செல்கிறது. அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் கால தாமதமாகிறது.



பட்டா இல்லை... 'துட்டு' இல்லை...


வீரசந்திரசேகர்: அரசு நிர்ணயித்த இழப்பீடு மிகக்குறைவாக இருந்தது. அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின்பு, இழப்பீடு தொகை கிடைக்காத போதிலும், பொதுமக்களின் நலன்கருதி வடபகுதி முழுவதும் இடித்துக் கொண்டோம். ஓராண்டுக்கு முன்பு பட்டா இருப்பவர்களுக்கு மட்டும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது



. தென்பகுதியில் பட்டாதாரர்களிடமிருந்து இடத்தை கிரயம் வாங்கிய சிலருக்கு இன்றுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இடத்தை கிரயம் வாங்கும்போதே பட்டா மாறுதலுக்கு மனு செய்துள்ளோம். ஆனால் இன்று வரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பல முறை மனு கொடுத்தும் பலன் இல்லை. எங்களிடம் பத்திரம் மட்டும் உள்ளது.ரோட்டிற்கு 15 அடி தேவை என பொதுப்பணித்துறையினர் ஒவ்வொரு கட்டடத்தையும் அளந்து விலை நிர்ணயம் செய்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர்



. அவர்கள் வருவாய் துறையிடம் கொடுத்து இழப்பீடு வழங்க கூறினர். வட்டிக்கு கடன் பெற்று தென் பகுதியில் பெரும்பாலான கட்டடங்களை இடித்துக்கொண்டோம். இழப்பீடு வராததாலும், பணப்பற்றாக்குறையாலும் சிலர் பாதிவரை இடித்துள்ளனர். ஒரு குடியிருப்பில் ஒரே பட்டாவில் பலர் இருக்கிறோம். அதனால் தொகையை பிரித்து கொடுக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்



.அரசின் பார்வை படுமாசமீபத்தில் நாங்கள் அதிகாரிகளை சந்தித்தபோது, இப்பிரச்னை 5 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. சென்னையில் அனுமதிபெற்றுதான் இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்றனர். கிரையப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு தொகையை பிரித்து கொடுக்க வேண்டும். தென்பகுதியில் சர்வீஸ் ரோடு துவக்கப்படாததால் அப்பகுதியில் சமூக விரோத செயல் நடக்கிறது. இரவில் பார் ஆக மாறி விட்டது. கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. திறந்த வெளி கழிப்பிடமாகவும் மாறி, துர்நாற்றம் வீசுகிறது என்றார்.சர்வீஸ்ரோடு அமைக்கப்பட்டால்தான் போக்குவரத்து நெருக்கடி தீரும். அரசின் பார்வை குன்றத்து சர்வீஸ் ரோடு பக்கம் திரும்புவது எப்போது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X