போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
03:58

மூவர் மீது கந்துவட்டி வழக்கு


மதுரை: காமராஜர்புரம் இந்திரா நகர் வில்லியம்மாள் 42. தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் அப்பகுதி சத்யா, முனியசாமி, சிவாவிடம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி மாதம் ரூ.8 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தார். கொரோனாவால் செலுத்த முடியவில்லை.



இதன் காரணமாக அவரை மிரட்டி அவதுாறாக பேசி, கூடுதல் வட்டி கேட்டு மிரட்டினர். வில்லியம்மாள் தற்கொலைக்கு முயன்றார். மூவர் மீது விளக்குத்துாண் போலீசார் கந்துவட்டி தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


மீண்டும் நாய்கள் கொலை


மதுரை: நகரின் சில பகுதிகளில் தொடர்ந்து தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், நேற்றுமுன்தினம் கோமதிபுரம் 6வது மெயின் ரோடு குறிஞ்சி 3வது குறுக்குத்தெருவில் 3 நாய்கள் கொல்லப்பட்டன. 2 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவில் விஷம் வைத்த மர்மநபர்கள் குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



உடலை வாங்க வராத உறவினர்கள்


ஆஸ்டின்பட்டி: உச்சபட்டி பெரியசாமி 60. சம்பக்குளம் அருகே நான்குவழிச்சாலையை கடக்க முயன்ற போது முருகன் என்பவர் டூவீலர் மோதி மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். உடலை உறவினர்கள் யாரும் வாங்க வராத நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.*பஸ் மறியல் செய்ய முயற்சிமேலுார்: கிடாரிப்பட்டி, மாப்பாறை டிரைவர் சுந்தரபாண்டியன் 27.



செப்.,12ல் டூவீலரில் சென்றபோது மற்றொரு டூவீலருடன் மோதியதில் தகராறு ஏற்படவே பொதுமக்கள் சமாதானப்படுத்தினார். மாலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் செப்.,13 ல் இறந்தார். இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யகோரி நேற்று மேலுார் மெயின் ரோட்டில் உறவினர்கள் பஸ் மறியல் செய்ய முயன்றனர். டி.எஸ்.பி., பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.



வீட்டில் திருடிய பெண் கைது வாடிப்பட்டி: அய்யனகவுண்டன்பட்டி காசி 34. குடும்பத்துடன் செப்.,4 சென்னை சென்றவர் நேற்று ஊர் திரும்பினார். வீட்டில் 9 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. அப்பகுதி தினமணி மனைவி ஜெயசித்ராவை 42, போலீசார் கைது செய்து 6 பவுனை மீட்டனர்.*மணல் திருடிய இருவர் கைதுபேரையூர்: எஸ்.மேலபட்டி மலையடிவார ஓடையில் மாட்டுவண்டி மூலம் மணல் திருடிய அதே ஊரை சேர்ந்த ஜெயக்கொடி 45, பெருமாளை 50, போலீசார் கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்



டூவீலர் திருடர்கள் கைது


பேரையூர்: பேரையூர் ஜவஹர்தெரு ஜெய்கணேஷ் உட்பட இருவரின் டூவீலர் திருடு போனது. இதுதொடர்பாக பேரையூர் மணிசங்கர் 22, மெய்யனுத்தம்பட்டி கவிபிரகாஷ் 20 உட்பட மூவரை கைது செய்து டூவீலர்களை போலீசார் மீட்டனர்.*இளைஞர் தற்கொலைபேரையூர்: அல்லிகுண்டம் அம்மாவாசி மகன் சிரஞ்சீவி 23. நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்



முதியவர்களிடம் நுாதன திருட்டு: 2 பேர் கைது



திருமங்கலம்: இப்பகுதி பார்வையற்ற முதியவர் பாண்டிக்கு அரசு உதவித்தொகை வாங்கித்தருவதாக கூறி மர்மநபர்கள் ரூ. 1.30 லட்சத்தை பறித்துச்சென்றனர். இதேபோல் பாண்டியன் நகர் தேவி 60, சிவகாசி கஸ்துாரியிடம் 65, ஆறு கிராம் நகையை திருடினர். மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவுபடி, இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் எஸ்.ஐ.,க்கள் மாரிகண்ணன்,கோபிநாத், போலீசார் ராஜா, கார்த்திக் ஆகியோர் மறவன்குளம் சரவணகுமார் 32, திருப்புவனம் கார்த்தியை 38, கைது செய்து பணம், நகையை மீட்டனர். போலீசாரை எஸ்.பி., பாராட்டினார்.



துாய்மை பணியாளர் கொலை



மேலுார்: தெற்குத்தெரு ஊராட்சி துாய்மை பணியாளர் நொண்டிசாமி 42. நேற்றிரவு மது அருந்திய போது அதே ஊரைசேர்ந்த பாண்டியராஜனுடன்40, தகராறு ஏற்பட்டது. கட்டையால் தாக்கப்பட்டதில் நொண்டிசாமி இறந்தார். கொலையாளியை கைது செய்யக்கோரி நான்குவழிச்சாலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X