தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பிய பல்கலை மாணவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காததால் விரக்தி | மதுரை செய்திகள் | Dinamalar
தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பிய பல்கலை மாணவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காததால் விரக்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
04:09

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் படித்தமுதுநிலை மாணவர்கள்தங்கள் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சான்றிதழ்கள்வழங்க உத்தரவிட கோரி தமிழக முதல்வருக்கு ஆன்லைன் வழியாகபுகார் அனுப்பியுள்ளனர்.



புகார் விவரம்: இப்பல்கலையில் 2018- -2020 கல்வியாண்டில் தொலைநிலை வழியில் படித்தஎங்களுக்கு2020 ஏப்ரலில் முதுநிலை பட் டம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்றால் 2020, டிச.,ல் தேர்வும், 2021, ஜன., மற்றும் பிப்.,யில் செய்முறை தேர்வும் முடிந்தன. ஜூனில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

முழு கட்டணம் செலுத்தியும்இதுவரை மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை பல்கலையில் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. 1200க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளோம். வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவை பாதித்துள்ளன. பல்கலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X