ராமர் கட்டிய பாலம்: தேவாரத்தில் ஆதாரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
04:11

மதுரை : ஹிந்து கடவுள்களை அவதுாறு செய்வதற்காவே ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த கும்பலின் சமீபத்திய பேச்சு ராமர் பாலம் கட்டியதற்கான ஆதாரம் தமிழ் இலக்கியங்கள் எதிலும் இல்லை என்பது. ஆனால் தேவாரத்தில் அதற்கான ஆதாரம் தெள்ளத்தெளிவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தமிழ் இலக்கிய ஆய்வாளர் பா.இந்துவன்.



அவர் கூறியது: ராமாயணம், மகாபாரதம் போன்றவை கட்டுக்கதைகள், ராமாயணத்தை மேலோட்டமாகத்தான் திருமுறைகள் எடுத்து கூறுகிறதே அன்றி ராமர் பாலம் கட்டியது பற்றியோ, ராவணனை பழித்து பேசியது பற்றியோ எந்த ஒரு திருப்பதிகங்களும் பாடவில்லை என ஒரு கருத்தை தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் சிவபெருமானின் சிறப்பை சொல்லும் விதத்தில் திருநாவுக்கரசர் தேவாரத்தில் எழுதியுள்ள பாடல் அழுத்தம் திருத்தமாக ராமாயண, சேது பாலம் கதைகளை விளக்குகிறது.



"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள் வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே"பொருள்:திருமால் வில்லை ஏந்திக் வானரசேனையோடு, கடலில் அணைகட்டி, இலங்கை சென்று அடைந்து, மேம்பட்ட பலபோர்கள் செய்து, தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்ரீவன், விபீடணன் முதலியோர் உதவியால் ராவணனுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான்.



இப்பாடலில் திருநாவுக்கரசர் குறிப்பிடும் ராமாயண நிகழ்வுகள் :ராமனை திருமால் என்று அழைக்கிறார். அதோடு வானர சேனையின் உதவியுடன் ராமர் பாலம் கட்டிய தகவலை கூறுகிறார். பின்னர் பாலத்தின் வழியாக இலங்கையை அடைந்து ராவணனை வெற்றி கொண்டதையும் குறிப்பிட்டுவிட்டு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, ராவணனின் கிரீடங்கள் பொடிப்பொடியாய் சிதறவிட்டு,



அவனை வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவர் சிவபெருமான் என்கிறார். சிவபெருமானின் சிறப்பை கூறும் இந்த பாடல் ராமாயண நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது.திருநாவுக்கரசரின் காலம் இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பானது. எனவே ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் ராமாயணம் மக்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருந்துள்ளது என்பதற்கு இந்த ஒரு பாடலே உதாரணம், என அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X